தமிழ் சினிமாவின் 'கனவு' நாயகன் சூர்யா தான்... லோகேஷ், வெற்றிமாறன் முதல் சிவா வரை... முழு விவரம் இதோ...

தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த கதாபாத்திற்கு என்ன தேவையோ அதனை சற்றும் குறைவில்லாமல் நடித்து நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் சூர்யா. அவருடைய நடிப்பிற்கு மேலும் ஒரு மணிமகுடமாக அண்மையில் அவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

எப்படி நடிப்பின் நாயகன் என சூர்யாவை ரசிகர்கள் அழைக்கிறார்களோ, அதே போல் தற்போது கனவு நாயகன் என்றும் அழைத்து வருகின்றனர். அதற்கு ஒரு காரணமும் உண்டு. அதாவது லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமாக எடுக்க நினைத்த திரைப்படம் இரும்புக்கை மாயாவி. அது மிகவும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகள் இருக்கும் எனது கனவு திரைப்படம் என்பது போல லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். அந்த கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படம் அவரது கனவு படம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் இதுவரை இல்லாத சிறுத்தை சிவா பட அளவிற்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்று தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதிலும் சூர்யா தான் ஹீரோ.

இதையும் படியுங்களேன் - ரஜினி செய்த வேண்டாத வேலைகள்... ஒழுங்காக நடிப்பை மட்டும் பாருங்க சார்... விவரம் இதோ...

அண்மையில் பா.ரஞ்சித் பேசுகையில் ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படங்காளன் மேட்ரிக்ஸ், டியூன் போன்ற திரைப்படம் போல தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும். அது ஜெர்மன் உலகமாக இருக்கும். அதில் சூர்யா தான் நாயகனாக நடிப்பார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதற்கான ஒரு முன்னோட்டம் தான் தற்போது சீயான் 61 திரைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்களேன் - ஆண்ட்ரியா நிர்வாண காட்சி எடுத்தேன்னு யார் சொன்னது.?! அந்தர் பல்டி அடித்த சர்ச்சை இயக்குனர்.!

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படமும் அவருக்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூறப்படுகிறது. இப்படி பெரிய பெரிய இயக்குனர்களின் கனவு திரைப்படத்தில் நாயகனாக சூர்யா நடிக்க இருப்பது, நடித்து வருவது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. உண்மையில் இந்த கனவு படங்களுக்கு தனது முழு உழைப்பையும் கொடுக்க சூர்யா எப்போதும் தயாராக இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

 

Related Articles

Next Story