சூர்யா 42: இனிமே இதை செய்யக் கூடாது!.. இயக்குனருக்கு உத்தரவு போட்ட சூர்யா!..:
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் இருபவர் நடிகர் “சூர்யா”. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடித்த “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்” போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒ.டி.டி தலங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் “எதற்கும் துணிந்தவன்” திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் “நடிப்பின் நாயகன்” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது படப்பிடிப்பில் இருக்கக்கூடிய விரைவில் வெளியிடப்படக்கூடிய சூர்யா 42 படம் வந்த பிறகு சூர்யாவின் ரசிகர்கள் எப்படி இருப்பார்கள், சூர்யாவிற்கு உலகம் முழுவதும் உள்ள வசூல் எப்படி இருக்கும் என்பது சூர்யா 42 படம் வெளியான பிறகு தெரியும் என திரையுலகில் பேச துவங்கியுள்ளனர்.
தற்போது சூர்யா 42 பற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மறியுள்ளது. அது மற்றுமின்றி இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார் என்றவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது.
சிறுத்தை சிவா ஒரு கமர்சியல் பட இயக்குநர் என்பதும் அதைத்தாண்டி சூர்யா 42 ஒரு சரித்திர பின்னணியில் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக இயக்குகிறார் என்பதும், இப்படம் 3d வடிவமைப்பில் இயக்குகிறார் என்பதும் தகவல்கள் வெளியானது. அதன் பிறகு தான் சூர்யா இனிமேல் இப்படத்தைப் பற்றி ஒரு சிறிய தகவல்களைக் கூட வெளியிடவேண்டாம் என்று சிறுத்தை சிவாவிடம் சூர்யா உத்தரவு போட்டது குறிப்பிடத்தக்கது....!!