பொறந்த இடத்த மறந்து அக்கட தேசத்தில் ஆட்டம் போடும் சூர்யா.. இதெல்லாம் நியாயமா பாஸ்?

by Rohini |   ( Updated:2025-04-28 08:42:01  )
suriya
X

suriya

Suriya: தற்போது சூர்யா ரெட்ரோ படத்தின் புரோமோஷனுக்காக கேரளா, ஆந்திரா என வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில் இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழா நடந்ததோடு சரி அடுத்து படக்குழு எந்தவொரு பேட்டியோ புரமோஷனோ சென்னையில் நடத்தவில்லை. ஆனால் சூர்யா கேரளா, ஆந்திரா என தன்னோட கோட்டைக்கு சென்று அங்குள்ள ரசிகர்களை சந்தித்து வருகிறார். இது கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிகிறது. ஏனெனில் இங்கு எந்தவொரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தாம் கேரளா, ஆந்திரா என சென்று கொண்டிருக்கிறாரே சூர்யா என விமர்சித்து வருகின்றனர்,

அதற்கு காரணம் இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சூர்யாவிடம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்துவிடுவார்களோ என்று கூட எண்ணியிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா சமீபகாலமாக பல சர்ச்சையான கருத்துக்களையும் பேசிக் கொண்டு வருகிறார். குறிப்பாக அது தமிழ் சினிமாவை தாக்குவதாகவே தெரிகிறது. அதை பற்றி கேட்க இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

ஆனால் இ்தை பற்றி எல்லாம் ஆந்திரா மற்றும் கேரளா பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாது. அதனால் தான் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா.

அதை பற்றிய அறிவிப்பை சமீபத்தில்தான் சூர்யா கூறினார். இது ஒரு குறுகிய கால படைப்பு என்பதால் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Next Story