சூர்யாவை காலி பண்ண நினைக்கும் கும்பல்! இதுக்கு மேல சுதாரிக்கலனா அவ்வளவுதான்

suriya
Suriya: சமீபத்தில் தான் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கங்குவா திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வி அடுத்து நிச்சயமாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் சூர்யா. ஆனால் ரெட்ரோ திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை .இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த படத்தின் விமர்சனத்திற்கு போவதற்கு முன்னாடி நான் ஒரு விஷயத்தை மட்டும் சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .சூர்யா ஜெயித்து விட வேண்டும் என விரும்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ஏனெனில் அவருடைய இந்த தனிப்பட்ட கல்வி பணி, இன்னொரு விஷயம் மதவாத சக்திகள் சூர்யாவையும் அவருடைய குடும்பத்தையும் எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
ஒரு சின்ன இடம் கொடுத்தால் போதும் ஒட்டுமொத்த சூர்யாவின் குடும்பத்தையே காலி பண்ணி விடுவார்கள். அந்த சூழலில் நாம் எவ்வளவு கவனமாக படம் பண்ண வேண்டும் என சூர்யா நினைக்க வேண்டும் .அவருக்கு இது தெரிந்திருக்க வேண்டும். அது அவருக்கு தெரிகிறதா தெரியவில்லையா என எனக்கு புரியவில்லை. இந்தப் படத்தை கண்மூடித்தனமாக விமர்சனம் செய்யும் சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம் .
படம் பார்த்து வெளியில் வரும் பொழுது அவ்வளவு கோபம் வருகிறது. ஆனாலும் இந்தப் படத்தில் இருக்கும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சொல்லி படத்தை விமர்சனம் செய்திருக்கிறோம். அதற்கு என்ன காரணம் எனில் சூர்யாவை ஒரு கும்பல் காலி பண்ண நினைக்கும் பொழுது குறைந்தபட்சம் அவருக்கு பக்கத்தில் நாம் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு சாதாரண ட்விட்டில் நான் அவனை ஒழித்து விடுவேன் என சொல்கிறார்கள். அப்படி இருக்கிறது சூர்யாவின் நிலைமை .இப்படி இருக்கும் பொழுது ஏன் சூர்யா இந்த மாதிரி தொடர்ந்து கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என தெரியவில்லை. அது நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ரஜினியை வைத்து பேட்ட என்ற ஒரு நல்ல படத்தை கொடுத்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ் .

சூர்யா எனும் போது ஏன் உங்களுக்கு இவ்வளவு அலட்சியம் என புரியவில்லை. கார்த்திக் சுப்புராஜ் அவர் எடுத்த படங்களை எல்லாம் பார்த்தால் கூட இவ்வளவு நல்ல படங்களை எடுத்திருக்கிறோமே? ஏன் இவ்வளவு மட்டமான கதையை எடுத்து இருக்கிறோம் என ரெட்ரோ படத்தை பார்த்து அவருக்கே தோன்றும். இந்த படத்திற்காக சூர்யாவும் ஜோதிகாவும் பணத்தை அள்ளி கொட்டி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது இந்தப் படத்தில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும் .இந்த படத்தின் கதை ஏன் ஒரே நேர்கோட்டில் போகவில்லை என சூர்யாவுக்கு தெரிந்திருக்க வேண்டும் .ஒண்ணுமே புரியவில்லை. என்ன காரணத்திற்காக இப்படி எல்லாம் படம் எடுக்கிறார்கள் என தெரியவில்லை என அந்தணன் கூறியிருக்கிறார்.