ரெட்ரோ டிக்கெட் புக்கிங் ஆரம்பம்!.. ஷோ ஓட்டிடலாமா ஸ்பெஷல் ப்ரோமோ வேற!.. மே 1 வசூல் வேட்டைதாம்ல!..

by Saranya M |
ரெட்ரோ டிக்கெட் புக்கிங் ஆரம்பம்!.. ஷோ ஓட்டிடலாமா ஸ்பெஷல் ப்ரோமோ வேற!.. மே 1 வசூல் வேட்டைதாம்ல!..
X

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களை இயக்கி நாளைய இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் மீடியாவுக்குள் வந்த கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதியை வைத்து பீட்சா படத்தை இயக்கி இயக்குனராக மாறினார்.

ஜிகர்தண்டா படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றியை ருசித்தார்.

அந்த படத்தை தொடர்ந்து எப்படியாவது விஜய்க்கு படம் பண்ணி ஆக வேண்டும் என அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, உடனடியாக சூர்யாவை வைத்து சூப்பராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உருவாக்கிய ரெட்ரோ திரைப்படத்தை எடுத்து முடித்துக் கொடுத்துள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படம் சரியாக வரவில்லை என நினைத்த சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் உடனடியாக ஆரம்பித்த படம் தான் இந்த ரெட்ரோ.

வரும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரெட்ரோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் டிக்கெட் புக்கிங் தற்போது வெளியாகி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விடுமுறை தினம் என்பதால் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் 9:00 மணிக்கான காட்சிகள் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள நிலையில், படு வேகமாக நிரம்பி வழிகின்றன. இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், முதல் நாள் காட்சிக்கான ஒட்டுமொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில், கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்கும் கம்பேக் கொடுப்பார் என தமிழ் சினிமா உறுதியாக நம்புகிறது.

Next Story