நடிகனா இருக்கிறத விட இப்படி இருக்கத்தான் ஆசை.. ‘ரெட்ரோ’ விழாவில் ஹைப் ஏத்திய சூர்யா

suriya
Retro: நேற்று சூர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படைப்பு என்றாலே அதில் செண்டிமெண்ட், எமோஷன், ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.அந்த மாதிரிதான் ரெட்ரோ திரைப்படமும் உருவாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் கன்னிமா பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டேவுக்கு முதலில் ஹலோமதிஹபிபோ பீஸ்ட் பாடல் எந்தளவு வரவேற்பை பெற்றுத்தந்ததோ அதற்கு அடுத்த படியாக இந்த கன்னிமா பாடலும் அவருடைய ஹிட் லிஸ்ட்டில் இணைந்திருக்கின்றன. நேற்று இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமாரில் இருந்து அனைவரும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தனர்.
கண்ணெதிரே தன் மகன் இவ்வளவு பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான் என்றால் எந்த தகப்பனுக்குத்தான் பெருமையாக இருக்காது? அப்படி ஒரு பெருமையில்தான் சிவக்குமாரும் மேடையில் சூர்யாவை பற்றி புகழ்ந்து பேசினார். தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்னாடி எவன் சிக்ஸ் பேக் வச்சது? இவன் தான் வச்சான் என மிகப்பெருமையாக பேசினார்.

கடைசியாக வந்து பேசிய சூர்யா ‘ நான் நடிகனாக இருப்பதை விட அகரம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் 8000 பட்டதாரிகளை உருவாக்கியதுதான் பெருமையாக இருக்கிறது. நான் ஒரு ஆவ்ரேஜான மாணவன் தான். ஆனாலும் அகரம் மூலம் எனக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்து அதன் மூலம் பல பட்டதாரிகளை இன்னும் உருவாக்குவோம் ’
‘இது எனக்கு மட்டுமில்ல. அகரத்தில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த பங்கு முக்கியமானது.’என்று கூறினார். சூர்யா சொன்னதை போல அகரம் மூலம் படித்தவர்கள் பல பேர் இன்று பெரிய பெரிய அதிகாரிகளாக பல ஊர்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.