Connect with us

Suriya: மூணு ஹீரோயின்ஸ் இருந்தும் என்ன பிரயோஜனம்? சூர்யா ரொம்ப ஃபீல் பண்றாரே

latest news

Suriya: மூணு ஹீரோயின்ஸ் இருந்தும் என்ன பிரயோஜனம்? சூர்யா ரொம்ப ஃபீல் பண்றாரே

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. அந்த படத்தை 20 வருடங்களுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். மௌனம் பேசியதே திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது முற்றிலும் காதல் கதையை மையப்படுத்தி வெளியான திரைப்படம். அமீர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்.

20 வருடங்கள் ஆனாலும் அந்த படத்திற்கு இன்று வரை ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த திரைப்படத்தை இப்போது வரை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்தில் அமைந்த பாடல்கள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் காதல் என்றாலே வெறுப்பு என்ற மனநிலையில் சுற்றி வரும் ஒரு இளைஞனாக சூர்யா நடித்திருப்பார்.

அதன் பிறகு அவருக்குள்ளும் ஒரு காதல் மலரும். பிறகு அந்த காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் அந்த படத்தின் மீதி கதை. அந்த படத்தில் அமைந்த ஒரு சில வசனங்கள் இப்போது வரை சமூக வலைதளங்களில் மீம்ஸுகளாகவும் ரீல்ஸ்களாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மௌனம் பேசியதே திரைப்படம் ரீ ரிலீஸ் பற்றி சூர்யா ஒரு வீடியோவில் பேசி அதை வெளியிட்டு இருக்கிறார். அந்த படத்தில் அவர் பேசிய, ஒழுங்காதானடா இருந்தீங்க, திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ், தனி மரம் தோப்பாகாது, காதல்ங்கிறது உள்ளிருந்து வரணும் போன்ற வசனங்களை அந்த வீடியோவில் பேசி இந்த படத்தை ரசிகர்களுடன் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இதில் திரிஷா, லைலா, நேகா போன்ற கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தும் இதில் ஒரு கட்டிப்புடி காட்சி கூட இருக்காது. அப்படி ஒரு தூய்மையான காதல் திரைப்படமாக இது அமைந்திருக்கும். இந்த படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களுடன் இந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது என சூர்யா அந்த வீடியோவில் பேசி வெளியிட்டு இருக்கிறார்.

To Top