தளபதி விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் தேதி ஷார்ப்பாக இன்று மதியம் 1.05 மணிக்கு வெளியானது. நடிகர் விஜய் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாக போகிறது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 ஜூன் மாதத்திலும், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபரிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: 6 ரூபாய் இல்லாம சூர்யா பட்ட கஷ்டம்!.. அம்மா மேல இவ்வளவு பாசம் உள்ளவரா!..
ஆனால், கில்லி மாதிரி விஜய் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். கூடவே அஜித்தின் ரம்ஜான் ட்ரீட் வருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். ஆனால், இரவு நேரத்தில் திடீரென ரம்ஜான் வாழ்த்து சொல்ல எழுந்த சூர்யா ஏற்கனவே வெளியிட்ட கங்குவா டீசரையே மறுபடியும் வெளியிட்டுள்ளார்.
கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி இருக்குமா? என உன்னிப்பாக அந்த டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் கடைசியில் பல்பு வாங்கியது தான் மிச்சம். விஜய்க்கு எதிராக அப்டேட் கொடுக்க சூர்யா நினைத்துள்ள நிலையில், கோட் படத்துக்கு போட்டியாக தனது பிரம்மாண்ட 3டி பான் இந்தியா படத்தை இறக்குவாரா? என்கிற கேள்வியை சூர்யா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷ் விட்ட குறட்டை தூள் கிளப்பியதா?.. தூங்க வைத்ததா?.. டியர் விமர்சனம் இதோ!..
எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் கடைசியாக சூர்யாவுக்கு வெளியானாலும், அந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. அதன் பின்னர் இன்னமும் சூர்யாவுக்கு படம் வெளியாகாத நிலையில், விஜய்யின் கோட் படத்துடன் மோதுவாரா? என்பது கேள்விக் குறியாத்தான் இருக்கிறது.
இரண்டு படங்களும் தனித்தனியாக வெளியானால் தான் வசூல் ஈட்டும் என்றும் பெரிய படங்கள் மோதினால் அந்த படங்களுக்குத்தான் பாதிப்பு என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…