இது ஏஐ எடிட்டிங் இல்ல பாய்!.. கனிமா பாட்டுக்கு நிஜமாவே சூர்யா அந்த விஷயத்தை பண்ணியிருக்காரு.. பாருங்க!

by Saranya M |   ( Updated:2025-04-05 05:59:13  )
இது ஏஐ எடிட்டிங் இல்ல பாய்!.. கனிமா பாட்டுக்கு நிஜமாவே சூர்யா அந்த விஷயத்தை பண்ணியிருக்காரு.. பாருங்க!
X

#image_title

ரெட்ரோ படத்தில் இடப்பெற்றுள்ள கனிமா பாடலுக்கு ரியாக்ஷனே இல்லமால் பாரியாக ஆடிய சூர்யா அப்பாடலுக்கு ரிஹர்ஷலின் போது சிரித்துக் கொண்டு சந்தோஷமாக ஆடிய வீடியோவை தற்போது 2டி எண்டர்டெய்ன்மண்ட் வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ மே1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2டி எண்டர்டெய்ன்மண்ட் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் சந்தோஷ் நாராயணன் இத்துடன் எட்டவது முறை இணைந்து பணியாற்றுகிறார். மேலும், சந்தோஷ் நாராயணனுடன் சூர்யாவின் முதல் படமாக ரெட்ரோ அமைந்துள்ளது. இதுவரை வெளியான கண்ணாடி பூவே மற்றும் கனிமா உள்ளிட்ட இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், கனிமா பாடலில் நடிகர் சூர்யா முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆடியது ரசிகர்கள் மனதில் ஒரு எமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ரெட்ரோ படத்தில் சூர்யாவின் பாரி என்ற கதாபாத்திரத்தின் பாடி லேங்குவேஜே அதுதான் என்றும் அதன்படி அவர் அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கனிமா பாடலுக்கு நடிகர் சூர்யா ஒத்திகை பார்க்கும் போது சிரிப்புடன் என்ஜாய் செய்து ஆடும் வீடியோவை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கனிமா பாடலுக்கு பல பெண்கள் சேலை கட்டி லட்சணமாக ஆடுவதை பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது என்றும் புஷ்பா 2 பீலிங்ஸ், ராபின்ஹுட் அதீத சர்ப்ரைஸ் பாடல்களுக்கு படுமோசமாக ஆடியது எல்லாம் கேவலம் என விளாசிய நிலையில், ரீல்ஸிலும் கனிமாவுக்கு ஸ்பெஷல் இடம்தான்.

Next Story