ஏழாம் அறிவு சூர்யாவின் மகனாச்சே!.. அந்த வித்தையிலும் சாதனை படைத்த தேவ்!.. அப்பா செம ஹேப்பி!..

by Saranya M |
ஏழாம் அறிவு சூர்யாவின் மகனாச்சே!.. அந்த வித்தையிலும் சாதனை படைத்த தேவ்!.. அப்பா செம ஹேப்பி!..
X

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே உடற்பயிற்சியில் பெரும் ஆர்வத்தை செலுத்தி வரும் நிலையில் அவர்களின் குழந்தைகள் மட்டும் என்ன சும்மாவா என்பது போல தற்போது மகன் தேவ் தனது திறமையை வெளிப்படுத்தி அப்பா சூர்யாவை ஹேப்பி ஆக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு தேவ் மற்றும் தியா என அழகான இரு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் கணவரும் மனைவியும் சேர்ந்து கொண்டு உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின. உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: மலேசியா வாசுதேவனுக்கு விடியலை கொடுத்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?

பல ஆண்டுகளாக இருவரும் ஜோடி போட்டு நடிக்காத நிலையில், ஜோதிகா தனது உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றி வருவதற்கு காரணமே மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கத்தான் எனக் கூறுகின்றனர்.

சூர்யாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட்டை நடிகர் சூர்யாவின் மகள் தேவ் வாங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஹீரோக்கள் என்னை மதிக்கிறதே இல்லை!.. ஹீரோயின்கள் தான் சான்ஸ் கொடுக்கிறாங்க.. கோபி நயினார் வருத்தம்!..

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு தனது மகனையும் தனது மகனுடன் படிக்கும் அவனது நண்பர்களையும் பிளாக் பெல்ட் வாங்கிய சக போட்டியாளர்களையும் ஊக்குவித்து பாராட்டியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், சியான் விக்ரமின் மகன் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். விஜய் சேதுபதி மகனும் சினிமாவில் நடிகராக மாறியுள்ளார். மாதவன் மகன் நீச்சல் போட்டிகளில் அசத்தி வரும் நிலையில், அஜித்தின் மகன் கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் மகனும் தற்போது தற்காப்பு கலைகளில் கலக்கி வருகிறார். 7ம் அறிவு படத்தில் சீனாவுக்கே தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுத்த போதி தர்மனாக சூர்யா நடித்திருப்பார்.

Next Story