ஆர்ஜே பாலாஜிக்கு பிரேக்! வெங்கி அட்லூரியை தேடி போன சூர்யா.. ஏன் இந்த வேண்டாத வேலை?

balaji
Suriya: சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது. ஆனால் கங்குவா படத்திற்கு போட்ட ஆட்டம் இந்தப் படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யாவிலிருந்து அனைவரும் அடக்கி வாசித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் போல சிவக்குமார்தான் கொஞ்சம் வாய் விட்டுவிட்டார்.
சூர்யாவை பற்றி பெருமையாக பேசுகிறேன் என பேசி இன்று வரை ட்ரோல் மெட்டீரியலுக்கு ஆளாகியிருக்கிறார் சிவக்குமார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பீஸ்ட் படத்தில் எப்படி பூஜா ஹெக்டேவுக்கு ஹபி பாடல் பெரிய புகழை பெற்றுக் கொடுத்ததோ அதை போல் ரெட்ரோ படத்திலும் கன்னிமா பாடல் இப்போதே பெரிய ரீச்சை அடைந்திருக்கிறது.
ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் திரைப்படம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கிடையில் குறுகிய கால படைப்பாக சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்திலும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குறுகிய கால படைப்பு என்பதால் இரண்டு கட்டமாகத்தான் மொத்தமாக படப்பிடிப்பையே நடத்த இருக்கிறார்களாம். அதனால் ஆர் ஜே பாலாஜி படத்திற்கு சூர்யா கொஞ்சம் பிரேக் கொடுத்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதன் பிறகு மீண்டும் ஆர் ஜே பாலாஜி படத்தை மொத்தமாக முடித்துவிட்டு மீண்டும் வெங்கி அட்லூரி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் ஏற்கனவே மமீதா பைஜூ நாயகி என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இரண்டாவதாக ஒரு ஹீரோயின் உள்ளே வருகிறார். அவர் வேறு யாருமில்லை. கீர்த்தி சுரேஷ் தான். இந்தப் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற சூழ் நிலையில் இருப்பதால் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன்பே அதன் இசை பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜிவிதான் இசை. அதனால் ஜிவியும் வெங்கி அட்லூரியும் துபாய் சென்று பின்னணி இசைக்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்களாம்.