Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!...

by ramya suresh |
Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!...
X

#image_title

கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்குள் ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்ததாகவும், நடிகர் சூர்யா 35 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் தகவல்.

நடிகர் சூர்யா தனது கெரியரிலேயே மிகப்பெரிய மற்றும் முக்கிய படமாக நிச்சயம் கங்குவா இருக்கும் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தார் அந்த நம்பிக்கை அனைத்துமே வீணாக போனதுதான் மிச்சம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி கிட்டத்தட்ட 10 மொழிக்கும் மேல் 11,500 ஸ்கிரீன்களில் பேன் இந்தியா படமாக வெளியானது கங்குவா. இரண்டரை வருடங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை பார்த்து பார்த்து எடுத்தார்.

நடிகர் சூர்யாவும் இந்த படத்திற்காக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இரண்டு வருடத்தையும் இப்படத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அது மட்டுமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். இவை அனைத்துமே சுக்கு நூறாக நொறுங்கி விட்டது. இப்படத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வந்தார்கள்.

இதையும் படிங்க: Kanguva: இந்தியன் 2-வுக்கு அடுத்து கங்குவாதான்!.. ஊற வச்சி ஒரு மாசம் அடிப்பாங்களே!….

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மேடைக்கு மேடை படத்தை பில்டப் செய்தே மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள் படக்குழுவினர். இவர்களின் பேச்சை எல்லாம் கேட்ட ரசிகர்கள் பலரும் சூர்யா காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கின்றது. கங்குவா நடிகர் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் என்றெல்லாம் கூறி வந்தார்கள். ஆனால் அவை அனைத்துமே படம் வெளியாவதற்கு முன்பு தான்.

நேற்று திரையரங்குகளில் படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள். எதிர்பார்த்த அளவிற்கு படம் சிறப்பாக இல்லை என்று கூறி வருகிறார்கள். படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சகர்கள் வரை படம் குறித்து அதிருப்தியை மட்டும் தான் தெரிவித்து வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை மிகுந்த இரைச்சலை கொடுத்து இருக்கின்றது எனவும் படம் பார்க்க சென்றவர்களுக்கு காது கிழிந்து விட்டது என்று கூறி வந்தார்கள். இப்படி பல விமர்சனங்களை சந்தித்த கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பு மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்ததாம்.

Kanguva

Kanguva

இதுகுறித்து வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியிருந்35 croresததாவது 'இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் ஜஸ்வந்த் பட்டாரி என்பவரிடம் 75 கோடி ரூபாய் நெகட்டிவ் பைனான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தவரை அந்த நெகட்டிவ் பைனான்சை கிளியர் செய்தால் தான் அது தயாரிப்பாளரின் படமாக மாறும். இல்லையென்றால் அது பைனான்சியரின் படமாக தான் இருக்கும்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஜஸ்வந்த் பட்டாரி 75 கோடி கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்யவிடுவேன் என்று கூறிவிட்டாராம். இதனால் வேறு வழி இல்லாமல் நடிகர் சூர்யா 35 கோடி பணத்தை கொடுத்து ஒரு பாதியை சரி செய்து விட்டார். மீதம் இருக்கும் 40 கோடியை தருவதற்கு ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். இன்று ஒரு நாள் மட்டும் படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒப்புக்கொண்டு அனுமதி வழங்கி இருக்கின்றார்.

இதையும் படிங்க: Kanguva: அடக்கொடுமையே… அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!…

இன்றைக்குள் பணத்தை செட்டில் செய்தால் தான் அடுத்தடுத்த நாள் படம் திரையரங்குகளில் வெளியாகும். இப்படி ஒரு நிபந்தனையில் தான் படம் ரிலீஸாகி இருக்கின்றது. இந்த 40 கோடியை கிளியர் செய்வதற்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சூர்யா மற்றொரு படத்தை நடிப்பதாக கூறி அக்ரீமெண்ட் ரெடி செய்து அதற்கு நெகட்டிவ் பைனான்ஸ் போட்டு, இதை வைத்து கங்குவா படத்தின் சிக்கலை சரி செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் இது எதிரொலிக்கும்' என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Story