“மேக்கப்லாம் கிடையாது… நிஜ கலர்”… அந்த படத்தில் இப்படித்தான் சூர்யா கருப்பாக மாறினார்??... அடேங்கப்பா!!

Suriya
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, தனது சினிமா பயணத்தில் பல அவமானங்களை தாண்டி வந்திருக்கிறார். சூர்யா நடித்த முதல் திரைப்படம் “நேருக்கு நேர்”. இத்திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார். இதில் விஜய், கௌசல்யா, சிம்ரன், சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

Nerukku Ner
அவமானத்தில் சூர்யா
சூர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனது முதல் திரைப்படமான “நேருக்கு நேர்” திரைப்படத்தில் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்திருந்தார். அதில் “கார்மெண்ட்ஸ் துறையில் தொழிலதிபர் ஆக வேண்டும் என உழைத்துக் கொண்டிருந்த என்னை, நேருக்கு நேர் படத்தில் நடிப்பதற்கு கூப்பிட்டு வந்துவிட்டார்கள்.

Vasanth and Suriya
கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது எனக்கு சுத்தமா நடிப்பே வரவில்லை. சாப்பாட்டு இடைவேளையின்போது இயக்குனர் வசந்திடம் “கல்கத்தா பிரியாணி சூப்பர் சார்” என கூறினேன். அதற்கு அவர் “நல்லா சாப்பிடு ராசா” என ஆற்றாமையோடு கூறினார்.
அவர் அப்படி சொன்ன தருணத்தில் நான் கூனிக்குறுகிப் போனேன். அன்று இரவு நான் தலையணை நனைய நனைய அழுதேன்” என கூறியிருந்தார்.
உருவ கேலி
இப்படிப்பட்ட அவமானங்கள் பலவற்றை தாண்டி வந்த சூர்யா, ஒரு கட்டத்தில் உருவ கேலியையும் சந்தித்தார். அவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரது உயரத்தை கேலி செய்து பல நகைச்சுவைகள் வந்தன. ஆனால் இதெற்கெல்லாம் சூர்யா அசரவில்லை. தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

Suriya
சமூக சேவை
சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு அவ்வப்போது குரல் கொடுக்கும் சூர்யா, கடந்த 2006 ஆம் ஆண்டு “அகரம்” என்ற அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார். மேலும் அந்த அறக்கட்டளையின் மூலம் பல இலங்கை அகதி குழந்தைகளின் கல்விக்கு உதவியும் செய்து வருகிறார்.
சினிமாவிற்கான அர்ப்பணிப்பு
இவ்வாறு தமிழின் தவிர்க்கமுடியாத நடிகராக திகழ்ந்து வரும் சூர்யாவின் அர்ப்பணிப்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலா பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சரத்குமார்… “பரவாயில்ல வெயிட் பண்றேன்”… கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து வெளிப்பட்ட பெருந்தன்மை…

Bala
இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து “நந்தா”, “பிதாமகன்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூர்யாவை வைத்து “வணங்கான்” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார் பாலா.

Nandha
இந்த நிலையில் அப்பேட்டியில் “நந்தா படத்தின் போது கருப்பாவதற்கு மேக்கப் எல்லாம் போடவில்லை. அப்படியே வெயிலில் சென்று படுத்துவிட்டாராம். அப்படித்தான் அந்த திரைப்படத்திற்காக கருப்பு நிறத்திற்கு மாறினார்” என சூர்யாவின் அர்ப்பணிப்பு குறித்து கூறியுள்ளார்.