கங்குவாவுக்கு போட்டின்னு சொல்லிட்டு!.. கடைசியில ரெட்ரோவுக்கு பிறகு வராரே.. பீனிக்ஸ் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி ஹீராவாக அறிமுகமாக உள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் சென்ற ஆண்டு சூர்யாவின் கங்குவா படத்துடன் போட்டிப்போட இருந்த நிலையில் ரீலிஸ் தேதி ஓத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், சூர்யாவின் அடுத்த படமான ரெட்ரோ படத்தின் ரீலிஸுக்கு பின் தான் பீனிக்ஸ் படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சிந்துபாத் படத்திலும் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். மேலும், படிப்பில் கவனம் செலுத்தி வந்த சூர்யா ஜவான் படத்தின் போது அனல் அரசு ஸ்டண்ட் மாஸ்டரை சந்தித்ததில் சூர்யாவிற்கு சண்டைக் காட்சியில் இருந்த ஆர்வத்தை பார்த்து ஆறு மாதங்களுக்கு ட்ரைனிங் கொடுத்துள்ளார்.

சூர்யா சிறு வயதிலிருந்தே பாக்ஸிங்கில் பயிற்சி பெற்றதாலும் அவருக்கு ஸ்டண்டுகளில் இருந்த ஆர்வத்தினாலும் எளிதாக கற்றுக்கொண்டதால் அனல் அரசு அவரை வைத்து ஒரு அதிரடியான ஆக்ஷன் படத்தை எடுக்க முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும், பிரேவ்மென் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் வீழான் படம் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷ்த்ரா, விக்னேஷ், சம்பத், முத்துகுமார், திலீபன்,ரிஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜுலை 4ம் தேது இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தனது மகன் சூர்யாவின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஜய் சேதுபதி.