சொல்லியிருந்தா நான் நடிச்சிருப்பேன்!.. லோகேஷ் கதையில் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!..

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் லோகேஷ் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். லோகேஷ் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் குறும்படங்களும் இயக்குவாராம்.

lokesh

lokesh

இவரின் முதல் படம் “மாநகரம்”. அதன் பின் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. சமீபகாலமாக லோகேஷ் இயக்கி வரும் படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிகர் விஜயை வைத்து லோகேஷ் தளபதி 67 “லியோ” என்ற தலைப்பில் இயக்கி வரும் படம் லோகேஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் மாநகரம். இப்படத்திற்கு பின் அவர் அடுத்து உருவாக்கிய கதை “இரும்புக்கை மாயாவி”. அந்த இரும்புக்கை மாயாவியின் பட்ஜெட் 2017 காலக்கட்டத்திலேயே ரூ.50 இதிலிருந்து 60 கோடி வரை வரும் என்று தெரிந்தவுடன், அவரே மிரண்டு போய் தன் மேல் தனக்கே நம்பிக்கை இல்லாமல் இவ்வளவு பட்ஜெட் வருகிறதே என்று நினைத்து அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம்.

அதன்பின் அவர் உருவாக்கிய கதைதான் கைதி. இப்படம் வெளியானபின் சூர்யா, கார்த்தி, லோகேஷ் இவர்களின் சந்திப்பின்போது சூர்யாவிடம் லோகேஷ் அந்த ‘இரும்புக்கை மாயாவி’ கதையின் ஒரு சில காட்சிகளை சொன்னாராம். இதை நீ சொல்லியிருந்தா நானே நடித்திருப்பேன் இதை நம்ம 2டி நிறுவனம் சார்பாகவே வெளியிட்டிருக்கலாமே என்று சூர்யா நம்பிக்கை கொடுத்தாராம்.

Kaithi

Kaithi

உடனே ‘சார் என் மேலே எனக்கே நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அவ்வளவு பெரிய பட்ஜெட். என்னுடைய மாநகரம் படத்தின் பட்ஜெட்டையே நான் ரூ.7 கோடியில் முடித்துவிட்டேன். அதுவே நான் பெரிய பட்ஜெட் என்று நினைத்தேன். இது 50,60 கோடி உடனே நம்மால் இது முடியுமா என்று நினைத்து ஒதுக்கி வைத்து விட்டேன்’ என்று சொன்னாராம். அதன் பிறகுதான் லோகேஷ் படத்தில் சூர்யா நடிக்கிறார், அப்படத்தின் பெயர் “இரும்புக்கை மாயாவி” என செய்திகள் வெளியானது. ஆனால், அப்பட வேலைகள் நடக்கவில்லை.

அதேநேரம், லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வந்து சூர்யா அதிரவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னது ஏ.ஆர் ரகுமான் இசையில் பாரதிராஜா பாடியிருக்கிறாரா?!. என்னப்பா சொல்றீங்க இது புதுசா இருக்கு..

 

Related Articles

Next Story