எனக்கு இமான் வேண்டாம்.. அவர்தான் வேணும்.. அடம்பிடிக்கும் சூர்யா....

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின் அவர் பாலா இயக்கும் புதிய படத்திலும், அண்ணாத்த பட இயக்குனர் சிவா இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், சிவா இப்படத்தில் இமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறாராம். ஆனால், சூர்யாவின் சாய்ஸ் அனிருத்தாக இருக்கிறதாம். ஹீரோ சொல்வதை கேட்க வேண்டும் என்பதால் சிவா - சூர்யா இணையும் படத்திற்கு அனிருத்தே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா இயக்கிய விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.
ஆனால், சூர்யா ஏனோ அனிருத் இசையமைத்தால் எப்படியாவது ஹிட் செய்து விடுவார் என கருதுகிறார் போல!...