இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது.
அந்த வகையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை தட்டி சென்றுள்ளது. அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா,மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- சிம்புவுக்கு பொண்ணு பார்க்க என்னால் முடியாது… கைவிரித்த டி.ஆர்.!
ஒட்டுமொத்தக்க சூரரைப்போற்று படத்திற்கு மட்டும் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யா தான் தனது 2 டி நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இதை போல, சிறந்த வசனம் – இயக்குநர் மடோனா அஸ்வின், மற்றும் சிறந்த அறிமுக இயக்குனர் என்பதற்கான இரண்டு விருதையும் தட்டி சென்றுள்ளது.
படத்தில் நடித்த யோகி பாபுவிற்கு விருது கிடைக்கவில்லை என்றாலும், கூட தன்னை வைத்து படம் இயக்கி சினிமாவில், அறிமுகமான மடோனா அஸ்வினை நினைத்து யோகி பாபு சந்தோசத்தில் இருக்கிறாராம். இதனையடுத்து, ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…