Connect with us

Cinema News

கங்குவா ஷூட்டிங் ஓவர்!.. வெறித்தனமான லுக்கில் சூர்யா கொடுத்த மிரட்டல் போஸ்.. இந்த வருஷம் செம வேட்டை!

Suriya Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தனது கடைசி நாள் சூட்டிங் நிறைவடைந்து விட்டதாக நடிகர் சூர்யா தற்போது ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் நடிகர் விஜய் இளமையான தோற்றத்தில் மீசை கூட இல்லாமல் மகன் கதாபாத்திரத்திற்காக நடித்து வரும் நிலையில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டுள்ளார்.

இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!

இன்னொரு பக்கம் நடிகர் சூர்யா முரட்டுத்தனமான தங்குவா காட்டுவாசி லுக்கில் போஸ் கொடுத்து ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாக தியேட்டரில் பெரிதாக பாக்ஸ் ஆபிஸ் இல்லாத நிலையில், அந்தக் குறையை தாங்குவா திரைப்படம் போக்கி மிகப்பெரிய வெற்றியை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் சூர்யா நடித்துள்ள கங்குவா சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட நல்ல படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. கடைசியாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையும் படிங்க: ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய் நடித்த லியோ உள்ளிட்ட படங்கள் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில் அதை முறியடிக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top