நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்திற்கு பின் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் அவரின் 47வது படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ஃபகத் பாசிலை வைத்து ஆவேசம் படத்தை இயக்கிய பிரபலமானவர்.
இந்தப் படத்தில் பிரேமலு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நாஸ்லன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனத்தின் பெயரில் சூர்யாவின் மனைவி ஜோதிகா தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவுக்கு ஏற்கனவே 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் இருக்கும்போது புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் எப்படி வந்தது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில்தான் இதுபற்றிய உண்மை வெளியே கசிந்துள்ளது. சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தை கிட்டத்தட்ட மூடிவிட்டார் என்கிறார்கள். மேலும் கங்குவா படம் தயாரித்த வகையில் சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜாவுக்கு பல கோடிகள் நஷ்டம். எனவே தனக்கு மீண்டும் கால்சீட் கொடுக்கும்படி ஞானவேல் ராஜா சூர்யாவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்.
எனவே, அவருக்காகதான் இந்த படத்தை தயாரிக்கிறாராம் சூர்யா. 2டி பெயரில் தயாரித்தால் கங்குவா படத்தால் நஷ்டமடைந்தவர்கள் நஷ்டஈடு கேட்டு படத்திற்கு பிரச்சனை கொடுப்பார்கள் என்பதால் ழகரம் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் படத்தை தயாரித்து அதில் வரும் லாபத்தை ஞானவேல் ராஜாவிடம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…