More
Categories: Cinema News latest news

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையாட ரெடியான சூர்யா!.. கங்குவா டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. செம அப்டேட்!..

நடிகர் சூர்யா கடைசியாக பாக்ஸ் ஆபிஸ் வேட்டையாடியது சிங்கம் 2 படமாகத்தான் இருக்கும். அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான ஒரு டஜன் படங்கள் சரியாக போகவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசனே கம்பேக் கொடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து விட்டனர். இந்நிலையில், சூர்யாவும் கூடிய சீக்கிரமே பாக்ஸ் ஆபிஸில் தன்னுடைய கால் தடத்தையும் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. கங்குவா படத்தின் டீசரை பார்த்தால் ரசிகர்கள் சூர்யாவின் ஹார்ட் வொர்க் மற்றும் சிறுத்தை சிவாவின் பிரம்மாண்டத்தை கண்டு மெய் சிலிர்த்து போய் விடுவார்கள் என பாஃப்டா தனஞ்செயன் தொடர்ந்து கங்குவா அப்டேட்களை அடுக்கி வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நயன்தாரா போல மாறிட்டாரே சமந்தா!.. இனிமேல் இந்த பொழப்பு மட்டும் தானா?..

சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தால் நடிகர் சூர்யா பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஈட்டியிருப்பார். ஆனால், அந்த இரண்டு படங்களையும் அவர் கொரோனா காலம் என்பதால் தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் பெரிய தொகைக்கு விற்று விட்டார்.

சூர்யாவும், ஜோதிகாவும் பாலிவுட்டில் பிசியாகி உள்ள நிலையில், ஜோதிகா நடித்த ஷைத்தான் படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சூர்யா படத்தின் வசூலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஜோதிகா வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கங்குவா படத்தின் மூலம் பான் இந்தியா வெற்றியை சூர்யா அடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!..

பாகுபலி படம் அளவுக்கு சூர்யாவின் கங்குவா இருக்குமா? அல்லது அண்ணாத்த போல சிறுத்தை சிவா சொதப்பி விடுவாரா? என்பது டீசரை பார்த்தால் தெரிந்து விடும்.

Published by
Saranya M

Recent Posts