சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

சுருளிராஜன்
சுருளிராஜன் வாழ்க்கை பயணம் :
சுருளிராஜன் : தமிழ் சினிமாவில் இன்றைய காலத்திலும் சரி அன்றைய காலத்திலும் சரி காமெடி ஒன்று இல்லை என்றால் படத்திற்கு சுவாரசியமே இல்லாமல் இருக்கும். திரைப்படங்களில் எப்பொழுதும் ஒரே மாதிரியான காட்சிகளை எடுத்து வந்தாலும் மக்களுக்கு போர் அடித்து விடும்.
அந்த வகையில் நடுவில் சில காமெடி நிகழ்வுகளை கொடுத்தால் தான் மக்கள் விருப்பத்துடன் அந்த படத்தை பார்ப்பார்கள் அந்த வகையில் இன்றைய காலத்தில் மட்டுமல்லாது அன்றைய காலத்திலும் நிறைய காமெடி நடிகர்கள் தங்கள் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு நல்ல பெயர் வாங்கினார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் சிறப்பாக காமெடி கொடுத்த நடிகர் சுருளிராஜனின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தொடர் தோல்வியால் துவண்டு போன சுருளிராஜன் :
ஆரம்ப காலங்களில் சுருளிராஜன் அவர்கள் நிறைய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு தகப்பனாக கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் இந்த நிலையில் அவருடைய நடிப்பு பெரிய அளவிற்கு மக்களிடையே தாக்கம் ஏற்படவில்லை இதனால் சோர்வடைந்த சுருளி அவர்கள் மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.
ஆனால் துரதிஷ்டமாக அவர் நடத்தும் நாடகத்தின் அன்றைய நாள் பெருமழை பெய்ததால் யாரும் நாடகத்தை பார்க்க வரவில்லை ஆதலால் அதுவும் தோல்வியில் முடிந்தது பிறகு சோகத்தில் மூழ்கி இருந்த நடிகர் சுருளிராஜன் அவர்களுக்கு அவரது நண்பர் ஒருவர் மீண்டும் சென்னைக்கு வர அழைப்பு விடுத்தார்.

சுருளிராஜன்
பிறகு மீண்டும் சென்னைக்கு வந்த சுருளிராஜன் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் அவரது நண்பரிடம் தன்னுடைய கவலைகளை எல்லாம் புலம்பிக் கொண்டு இருந்தால் சுருளிராஜன் இதனை கேட்டு அவரது நண்பர் ஒரு நிமிடம் நீ ஏவிஎம் ஸ்டுடியோ வரை சென்று வா என்று சொல்லி இருந்தார். இவர் ஏன் எதற்காக நான் அங்கே போக வேண்டும் என்று கேட்டார் ஒரு நிமிஷம் அங்க போயிட்டு வா அப்படின்னு சொன்னாரு உடனே சரி நான் போறேன் அப்படின்னு அங்க போய் பார்த்ததும் அவருக்கு பயங்கர அதிர்ச்சிகரமான ஒரு காட்சி அமைந்தது.
அந்த ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக இவரது கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டது. அது காதல் படுத்தும் பாடு எனும் படத்தில் சுருளி அவர்கள் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அந்த அந்தப் புகைப்படம் எங்கே வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் மிரண்டு போய் என் கண்ணே என்னால் நம்ப முடியவில்லை அப்படின்னு அவரே ஷாக் ஆகி நின்னுட்டு இருந்தாரு. ஆக சென்னை அவரை நன்கு வரவேற்று விட்டது என்று நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த நிறைய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் சுருளிராஜன். அவருடைய திரை வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
இதையும் படிங்க- எம்.ஜி.ஆர் செய்த அந்த காரியம்..!பதறி ஓடி வந்த தயாரிப்பாளர்..!என்ன நடந்தது தெரியுமா..?
சுருளிராஜன் அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் :
சுருளிராஜன் அவர்கள் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயம் எல்லாம் நாடகங்களிலும் நடித்து வருவார் மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் நாடக கலைஞர்களாகவும் பணியாற்றி வந்தார். அவர் நாடகங்களில் நிறைய வேடங்களில் நடித்துள்ளார் குறிப்பாக அவர் நடித்த சக்கை போடு போடு ராஜா எனும் நாடகத்தில் ஒரு வயதான ஒருவருடைய வேஷம் ஒரு இளைஞருடைய வேடம் மற்றும் ஒரு பெண்ணுடைய வேடம் போன்ற மூன்று வேடங்களையும் ஒரே நாடகத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அந்த நாடகம் விருதுநகரில் எடுக்கப்பட்ட ஒரு நாடகம் இவருடைய கதாபாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக நாடகம் நடிக்கும் அறைக்குள்ளேயே நிறைய இளைஞர்கள் யார் சுருளிராஜன் என்பதை கண்டுபிடிப்பதற்காக உள்ளே வந்தனர் ஆனால் அதில் நடிக்கும் பெண் வேடமும் சுருளிராஜன் தான் என்பது அவர்களுக்கு அப்போதுதான் தெரிந்தது இதனை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள் இப்படி ஒரு நடிகனா என்று அனைவரும் அவரை பாராட்டினார்கள்.
இந்த நிலையில் சுருளிராஜன் அவர்களுக்கு நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருந்தது காரணம் இவர் நடித்த படங்களில் எல்லாம் தகப்பன் கதாபாத்திரங்களையே இவர் தேர்வு செய்து வந்ததால் இவருக்கு வயது அதிகம் என்றே நிறைய வதந்திகள் கிளம்பின ஆதலால் இவருக்கு பெண் கொடுக்கும் தயக்கம் அனைவரிடமும் இருந்தது. இதனை முடிவு கட்ட ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் சுருளிராஜன் இதற்குப் பிறகே அவருக்கு திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு அவருக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள் ஆனால் அவருக்கு ஒரு பெண் குழந்தையாவது வேண்டும் என்று நினைத்திருந்தார் ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாக பிறந்தது சற்று கவலையாகவே இருந்தார் பிறகு வரும் நாட்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சுருளிராஜன் அவர்கள் காலத்தினால் எப்பொழுதும் அழியப்படாத ஒரு காவியமாகவே திகழ்ந்து வருகிறார்.

Sathya raj
சுருளிராஜன் சத்யராஜுக்கு கொடுத்த அட்வைஸ் :
இந்த நிலையில் நடிகர் சுருளிராஜன் அவர்கள் அந்த காலத்தில் வளர்ந்து வரும் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு ஒரு ஆலோசனை ஒன்றை வழங்கினார் அதில் அவர் கூறியதாவது, ஒரு படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரம் சுருளிராஜனுக்கு மிகவும் பிடித்திருந்தது ஆதலால் சுருளிராஜன் அவர்கள் சத்யராஜை ஒருநாள் சந்தித்தபோது நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் நீ கண்டிப்பாக 25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் 25 வயதில் திருமணம் செய்து கொண்டால் தான் உன்னுடைய ஐம்பதாயாவது வயதில் உன் மகன் உன் பொறுப்பை பார்த்துக் கொண்டு உன்னையும் பார்த்துக் கொள்வான் என்று அறிவுரை கூறினார்.
இதனை அடுத்து சத்யராஜ் ஒரு நேர்காணலில் சுருளிராஜன் அவர்கள் தன்னிடம் கூறிய அறிவுரையை நீண்ட நாட்கள் கழித்து நினைவு கூர்ந்தார். ஒரு நாள் சத்யராஜ் தனது காரில் பயணம் செய்து கொண்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டு சென்றிருந்தார் அவரது மகன் சிபிராஜ் அவர்கள் அவரை வைத்து கார் ஓட்டினார் அப்போது தான் அவருக்கு சுருளிராஜன் அவர் கூறியதை நினைவுக்கு வந்தது என்று சத்யராஜ் அவர்கள் ஒரு நேர்காணலில் கலகலப்பாக கூறியிருந்தார்.
சுருளிராஜன் அவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்கும் திறமை கொண்ட ஒரு நடிகர் ஆவார் அவருடைய இழப்பு தமிழ் சினிமாவில் ஒரு நீங்காத ஒரு இழப்பு ஆகும் இன்றுவரை சுருளிராஜனின் காமெடிகள் மக்களை சிரிக்க வைக்க தான் செய்கிறது என்றும் மக்களிடம் நீங்காத ஒரு காமெடி நடிகனாக சுருளிராஜன் அவர்கள் திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க- எம்.ஜி.ஆர் செய்த அந்த காரியம்..!பதறி ஓடி வந்த தயாரிப்பாளர்..!என்ன நடந்தது தெரியுமா..?