8 மணிக்கு எழுந்து ஆடுறதுக்கும்… அடுத்தவங்கள குறை சொல்றதுக்கும் இது ஒன்னும் பிக்பாஸ் இல்ல!

Published on: September 24, 2021
parvathy
---Advertisement---

விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் தொலைக்காட்சி உள்ளிட்ட மூன்று சேனல்களும் ரியாலிட்டி ஷோ நடத்தி ஒன்றோடு ஒன்று TRPக்காக அடித்துக்கொள்கின்றனர். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டான ரியாலிட்டி ஷோ என முத்திரை குத்தி வைத்திருந்தது விஜய் டிவி.

ஆனால், களத்தில் இறங்கிய ஜீ தமிழ் பிக்பாஸை அடித்து நொறுக்கிவிட்டு SURVIVOR நிகழ்ச்சி தான் உண்மையான ரியாலிட்டி ஷோ என மக்கள் மத்தியில் நிரூபித்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தேவையான துணி மணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு கொடுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பை மட்டும் வைத்துக்கொண்டு அடர்ந்து காட்டிற்குள் கொடுக்கப்படும் கடுமையான டாஸ்க்குகளை செய்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கியுள்ளனர்.

இதில் பார்வதியின் நடத்தை யாருக்கும் பிடிக்கவில்லை. வாய் மட்டும் ஓயாமல் பேசிக்கொண்டு அடுத்தவர்களுடன் வம்பு செய்வது வீண் சண்டை இழுப்பது என கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். அப்படித்தானே நேற்றைய நிகழ்ச்சியில் எல்லோரும் தன்னை ஒதுக்குவதாக குறை கூறினார்.

parvathy-2
survivor

இதனை மறுத்த அம்ஜத்கான், ‘8 மணிக்கு எழுந்து ஆடுறதுக்கும், அடுத்தவங்களை குறை சொல்லிட்டே சமைப்பதற்கும், சண்டை போட்டுக்கொண்டே பாத்திரத்தை கழுவுவதற்கும், ஏசி ரூமில் படுத்துக் கொண்டு பிறரை பற்றி Gossip பேசுவதற்கும் ஏற்ற நிகழ்ச்சி இது அல்ல’ என்று பிக்பாஸை மறைமுகமாக விமர்சித்தார். ஏற்கனவே பார்வதி பிக்பாஸின் இரண்டாவது ஜூலி என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்தனர். இப்போ சக போட்டியாளர்களே பார்வதியை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment