surya
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு வரலாற்று பின்னனியில் இருக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமைய இருக்கிறது.
கிட்டத்தட்ட 10 மொழிகளில் ரிலீஸாகும் சூர்யா 42 திரைப்படம் முற்றிலும் 3டியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் மதன் கார்கி வசனத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது.
இதையும் படிங்க : சிம்பு இந்த இயக்குனருடன் இணைந்தால் இன்னும் டாப்ல வருவார்… பிரபல தயாரிப்பாளர் கொடுத்த டிப்ஸ்…
இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் ஹிந்தி சாட்லைட், திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவிற்கிடையே உள்ள விலையுயர்ந்த விநியோகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களான RRR மற்றும் பொன்னியின்செல்வன் படத்தின் உரிமையையும் கூட இந்த நிறுவனம் தான் வாங்கியிருந்தது. இந்திய அளவில் ரிலீஸ் செய்யக்கூடிய பேன் இந்தியா படங்களை வெளியீடுவதில் பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் முன்னிலையில் இருக்கிறது.
இப்போது சூர்யாவின் படத்தை இந்த நிறுவனம் வாங்கியிருப்பது இன்னும் அதிக லாபத்தை பெற்றுத்தரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. UV கிரியேஷன்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சேர்ந்து தயாரிக்கும் சூர்யா 42 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…