வைரலாகும் சூர்யா 42 படத்தின் டைட்டில்?.. பின்ன வரலாற்றுப் படம்னா சும்மாவா?..

by Rohini |   ( Updated:2023-04-13 11:48:31  )
surya
X

surya

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஆர்ம்பகாலங்களில் ஏதோ நடிக்கின்றோம் என்று தனது பயணத்தை தொடர்ந்தவர் சினிமாவின் போக்கை உணர்ந்து அவருக்கு இருந்த பொறுப்பையும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு திறம்பட நடிகராக மாறினார்.

சூர்யாவின் தனித்தன்மை

சார்மிங் பாயாக லவ்வபிள் பாயாக இருந்த சூர்யாவை ஒரு சீரியஸான நடிகராக மாற்றிய பெருமை இயக்குனர் பாலாவையே சேரும். நந்தா படத்தின் மூலம் தான் சூர்யாவின் நடிப்பே வெளியே வந்தது. அதன் பிறகு தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வந்தார். கிட்டத்தட்ட நந்தா படத்திற்கு பிறகு அவரின் கெரியரை திருப்பி பார்த்தால் நடித்த அத்தனை படங்களிலுமே சூர்யாவின் தனித்தன்மை தெரியும்.

பிதாமகன், காக்க காக்க, சிங்கம் , வேல், சூரறை போற்று,ஜெய்பீம், போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார், யாருமே எதிர்பார்க்காத நடிப்பை விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்து மிரட்டியிருப்பார். இப்படி சூர்யாவின் கெரியரில் பல பரிமாணங்களை பார்க்க முடிகிறது.

ஜெட் வேகத்தில் சூர்யா 42

அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அந்த படம் 10 மொழிகளில் தயாராகி கொண்டிருக்கிறது. வரலாற்று கதையை பின்னனியாக வைத்து சூர்யா 42 திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது.

பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இன்னும் கிட்டத்தட்ட 70 நாள்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சரியாக அடுத்த வருடம் தான் சூர்யா 42 திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அப்டேட்

இந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி சூர்யா 42 படத்தின் ஒரு பெரிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதுவரை அந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில் இப்படி ஒரு அறிக்கை வெளியானதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

ஒரு வேளை டைட்டிலாக இருக்குமா? இல்லை படத்திற்கான புரோமோ வீடியோவாக இருக்குமா? என்று குழம்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் சமூக வலைதளத்தில் சூர்யா 42 படத்தின் டைட்டில் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருக்காது எனவும் அதே சமயம் இதுவரை யாரும் கேள்விப்படாத பெயரில் தான் டைட்டில் இருக்கும் என்றும் செய்திகள் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : இந்த விஷயம் பெருசா யாருக்கும் தெரியாது.. இளையராஜா பற்றி வாலி சொன்ன சீக்ரெட்!..

Next Story