நீ வா தல…! கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் இனி அதிரும்..! சூர்யா - சுதா கொங்காரா படத்தின் டைட்டில் இதான்..!
Surya: தமிழ் சினிமாவில் மாஸ் காம்போ என அழைக்கப்படும் சுதா கொங்கரா, சூர்யா ஜோடி மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான பெயரால் படக்குழு மீண்டும் ட்ரெண்ட்டாகி இருக்கிறது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவை இயக்கினார் சுதா கொங்கரா. முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. தேசிய விருது, ஆஸ்கார் நாமினி என படம் மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. அந்த வகையில் மீண்டும் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதையும் படிங்க: லியோ வசூல் 500 கோடி தான்… ஆனா தளபதியை அசிங்கப்படுத்த களமிறங்கிய போட்டி நடிகர்..!
அவர்கள் ஆசையை பூர்த்தி செய்யும் பொருட்டு சூர்யாவின் 43வது படத்தினை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார். இப்படத்தில் துல்கார்சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் முழு பெயரையும் அறிவிக்காமல் புறநானூறு என்று மட்டும் பாதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முழு பெயரின் பாதி தான் புறநானூறா இல்லை இப்போதைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் பெயரா என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இந்த க்ளைமேக்ஸ் நல்லா இல்ல.. இயக்குனரை வெறுப்பேற்றிய தளபதி விஜய்..! சூப்பர் ஹிட் போச்சா..!
2டி என்டெர்டெயிண்மெண்ட் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. நஸ்ரியா, இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டைட்டில் அறிவிப்பைக் காண: https://twitter.com/Suriya_offl/status/1717489171227619558