Cinema News
அதானே இதுவும் அதான்… சூர்யா44 படத்தின் லீக்கான டைட்டில்… நல்லாவா இருக்கு?
Suriya44: சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா44 படத்தின் டைட்டில் குறித்த சுவாரசிய அப்டேட் இணையத்தில் இருக்கிறது.
கங்குவா படத்தின் தோல்வி
நடிகர் சூர்யா 908 நாட்கள் கழித்து கோலிவுட்டில் நடித்து வெளியான திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் வசூல் 2000 கோடி இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் முதல் காட்சியிலேயே படம் மோசமான விமர்சனத்தை குவித்தது.
தொடர்ச்சியாக வசூலும் அடி வாங்கியது. படம் பட்ஜெட் வசூலை குவிக்குமா என்ற சந்தேகமே எழுந்தது. இதனால் சூர்யா குடும்பத்தினர் ரசிகர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, ஜோதிகா, தனஜெயன் பலரும் கண்டன குரல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டதுக்கு காரணம்… மூடிமறைத்தது ஏன்? பேரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
இதுவும் கங்குவா படத்துக்கு எதிராகவே அமைந்தது. பாலிவுட்டில் படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கிளம்பிய சூர்யாவுக்கு அதுவும் அடக்காமல் போனது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருந்த கர்ணன் படமும் தற்போது கைவிடப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதனால் நடிகர் சூர்யா மீண்டும் கோலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சூர்யா 44 மற்றும் சூர்யா 45 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் 44வது படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். 45வது படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூர்யா 44 டைட்டில்
இந்நிலையில் சூர்யா44 படத்தின் டைட்டில் கல்ட் லவ் லாக்டர் வார் என வைக்கப்பட்டலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபகாலமாகவே தமிழ் திரைப்படங்கள் ஆங்கில பெயர்களை வைப்பதை வாடிக்கையாக மாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: அட இப்படியொரு சாதனையா!.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பட்டையை கிளப்பும் லக்கி பாஸ்கர்!..