மாயமான சூர்யா! ஸ்தம்பித்த படக்குழு.. சூர்யா 44ல் நடந்தது என்ன?

by Rohini |
surya
X

surya

Surya: தற்போது சூர்யா நடிப்பில் அவருடைய 44ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டு வருகின்றது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஒரு விபத்து ஏற்பட அவருடைய தலையில் பலமாக அடிபட்டதாக ஒரு செய்தி வைரலானது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதும் ரோப் கார் கயிறு அறுந்து விழுந்ததில் அவருடைய தோள்பட்டையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார் சூர்யா.

இதையும் படிங்க: நடிகரால் முட்டுக்கட்டையான கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங்.. என்னங்க இப்படி ஆச்சு?

அதற்கடுத்தபடியாக அவருடைய 44ஆவது படத்திலும் தலையில் பலமாக அடிபட்டதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்க அடுத்ததாக ஒரு புதிய தலைவலி சூர்யா44வது படத்திற்கு வந்திருக்கிறது.

இந்த படத்திற்காக 150 ரஷ்யர்கள் டூரிஸ்ட் விசா மூலம் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்களாம். சூர்யாவுக்கு நடந்த விபத்தின் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட அந்த ரஷ்யர்களில் 45 பேர் மீண்டும் ரஷ்யாவிற்கு சென்று விட்டார்கள்.

இதையும் படிங்க: கொடுத்த பரிசைத் திருப்பி கேட்கலாமா..? ரம்பாவிடம் மல்லுக்கட்டும் கவுண்டமணி குடும்பம்

மீதம் 115 பேர் ஊட்டியில் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படி டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும்? எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் காயமான சூரியாவிற்கு தற்போது என்ன ஆனது? அவர் எப்படி இருக்கிறார் என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இதற்கு இடையில் அவர் நடித்திருக்கும் இந்த 44 வது பாடத்தின் படிப்பும் தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மூணுல ஒன்னு… மீண்டும் கடனாளியாகும் மனோஜ்.. கோபிக்கு தெரிந்த உண்மை.. தங்கமயிலுக்கு கொழுப்புதான்!

Next Story