‘அகரம்’ அறக்கட்டளை நிறுவ காரணம் யாருனு தெரியுமா?.. இந்த நடிகரின் இன்ஸ்பிரேஷன் தானாம்..

surya
நடிப்பையும் தாண்டி சமுதாயத்திற்கு உதவும் ஒரு நல்ல மனப்பான்மையுடன் சூர்யா ஏற்படுத்திய அமைப்பு தான் அகரம் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே ஒரு தரமான கல்வியை சமுதாயத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவினருக்கும் நல்ல முறையில் கொண்டு சேர்ப்பதே ஆகும். இதை கடந்த 2006 ஆம் ஆண்டு
முதல் சூர்யா இடைவிடாது நடத்திக் கொண்டு வருகிறார்.

surya1
இவரின் அறக்கட்டளை சார்பில் நிறைய குழந்தைகள் நல்ல கல்வியை பெற்று இன்று பெரிய பெரிய பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். சினிமாவில் இருந்து கொண்டு ஒரு திரைப்பிரபலம் நடத்தும் இந்த அறக்கட்டளை கடைசி சாமானியர் வரைக்கும் எட்டியிருக்கிறது.
அந்த அளவுக்கு சூர்யா மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மாநிலத்தில் முதல் மதிப்பெண், 10, 12 வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊக்கத்தையும் கொடுத்து வருகிறது இந்த அறக்கட்டளை.

surya2
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்படி சூர்யா இந்த அளவுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்ற காரணத்தை ஜெய்பீம் இயக்குனர் ஒரு பேட்டியின் போது கூறினார். அதாவது இயக்குனர் ஞானவேல் முன்பு பத்திரிக்கையில் பணியாற்றிய போதே சூர்யாவுடன் நல்ல பழக்கமாம். அப்போது ஞானவேல் எப்போது குழந்தைகளின் படிப்பை பற்றியும் கல்வியை பற்றியும் பேசுவாராம்.
அதன் மூலம் ஈர்க்கப்பட்டு சேர்ந்து குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க எதாவது செய்யலாமா? என்று கேட்டாராம். அதற்கெல்லாம் முன்விதையாக போடப்பட்டது அவரது அப்பாவான சிவக்குமாராம். 1979 ஆம் ஆண்டு முதலே கிட்டத்தட்ட 30 வருஷமாக சிவக்குமார் கல்வி அறக்கட்டளை என்ற நிறுவனத்தை ஆரம்பித்து குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வந்தாராம் சிவக்குமார். அதே ஜீனில் ஊறிப்போன சூர்யாவும் இப்போது அவரின் அப்பா பணியை தொடர காரணமாக அமைந்தது என்று கூறினார்.
இதையும் படிங்க : ‘பத்து தல’ ஆடியோ லாஞ்சில் சிம்புவின் எண்ட்ரி இப்படித்தான் இருக்கப் போகுது!.. எதிர்பார்ப்பை எகிற வைத்த இயக்குனர்.

surya sivakumar