கங்குவா மட்டுமில்ல.. சூர்யாவின் அடுத்த படத்திற்கும் அதே நிலைமைதான் போல! எங்க போய் முடிய போதோ?

surya (1)
Actor Surya: சூர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் மிகப்பெரிய அளவில் அதிக அளவு பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. வரலாற்று பின்னணியில் அமைந்த இந்த கதையில் சூர்யா ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக படப்பிடிப்பு நடந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தும் படத்திற்கான எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தன. இதனால் கோபமடைந்த சூர்யாவின் ரசிகர்கள் ஆக்ரோஷம் அடைந்து எப்பொழுதுதான் இந்த படத்தின் அப்டேட் வரும் என போஸ்டர் ஒட்டி கேட்கும் அளவுக்கு இந்த படத்தின் நிலைமை மாறிப்போனது.
இதையும் படிங்க: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில சிம்புகிட்ட வந்து நிக்குதே! சூடுபிடிக்கும் ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சினை
அதன் காரணமாகவோ என்னவோ திடீரென நேற்று கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்த இந்தப் படம் தாமதமாவதற்கு ஒருவகையில் சூர்யாவும் காரணம் என்று சொல்லப்பட்டது. ஏனெனில் ஒரு மாதத்திற்கு பத்து நாட்கள் என்ற வீதத்தில் கால்ஷீட் கொடுத்திருந்தாராம் சூர்யா .
அதற்கு காரணம் ஜோதிகா போட்ட கண்டிஷன் என்றும் சொல்லப்பட்டது. அதாவது சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருப்பதால் ஜோதிகா படப்பிடிப்பு போகும் நேரத்தில் சூர்யா வீட்டில் இருக்க வேண்டும். சூர்யா படப்பிடிப்புக்கு போகும் நேரத்தில் ஜோதிகா வீட்டில் இருக்க வேண்டும் .இப்படி ஒரு ஒப்பந்தத்தில் தான் இவர்கள் சினிமாவில் நடித்து வந்தார்கள்.
இதையும் படிங்க: மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு… இந்தியன் 2 தாத்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
இதன் காரணமாகவே தான் சூரியாவால் தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால்தான் இந்த தாமதத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. இதே மாதிரி சூர்யா இப்போது நடித்து கொண்டிருக்கும் அவருடைய 44வது படத்திலும் ஒரு பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் இது .
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறாராம் சூர்யா. ஏனெனில் கட்டுமஸ்தான உடம்பில் சூர்யா இந்த படத்தில் நடிப்பதால் ஜிம்முக்கு சென்று விட்டு வருவதால் இந்த தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ராகம்… வெவ்வேறு ஜாலம்… இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான அந்த ரெண்டு பாடல்கள்
அதுவும் அந்த உடற்பயிற்சி நிலையம் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்துதான் போக வேண்டுமாம். அதனால் அதை முடித்துக்கொண்டு வர தாமதமாகிறது என சொல்லப்படுகிறது. அதனால் இது சூர்யாவின் தவறு இல்லை. படத்திற்கு தேவைப்படுவதால் தான் இந்த ஒரு தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.