வாடிவாசலுக்கும் வணங்கான் நிலைமைதானா..? சிக்கலில் மாட்டி விழி பிதுங்கும் வெற்றிமாறன்!..

by ராம் சுதன் |   ( Updated:2023-12-05 09:08:17  )
vetri
X

vetri

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்ததால் எதார்த்த நிகழ்வை சினிமா மூலம் பிரதிபலித்தார். பொல்லாதவன் ஆடுகளம் என இவரது படைப்புகள் தனி அடையாளத்தை கொண்டிருந்தாலும் அசுரன் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்களின் விருப்பத்துக்குரிய இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

இவரின் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். அதே சமயத்தில் சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்க உள்ளார். படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நீண்ட காலமாகவே இழுவையில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் வாடிவாசல் திரைப்படம் மாடு பிடித்தலை மையமாகக் கொண்டு கதைக்களம் இருப்பதால் வெற்றிமாறன் அதை உண்மையாகவே படம் எடுக்க திட்டமிடுகிறார்.

சூர்யாவும் அதற்கென்றே தனியாக காளை மாடு வாங்கி பயிற்சியும் செய்து வருகிறார். இந்நிலையில் பருத்திவீரன் தொடர்பான பிரச்சனை சமீபத்தில் வெடித்து வருவதால் சூர்யா மற்றும் அமீருக்கு இடையே இருந்த விரிசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அமீர்தான் நடிக்க வேண்டும். அவரைத் தவிர வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. என உறுதியாக இருக்கிறார் வெற்றிமாறன்.

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இப்படத்திற்கான மாடு பிடித்தலுக்கான பயிற்சி சென்னையில் செட் அமைத்து தயாரிப்பு நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. அதில் அமீரும் சூர்யாவும் மாடுகளை அடக்குவதற்கான பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் சூர்யா அதில் கலந்து கொண்டு மாடுகளுடன் பழகி அந்த பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வந்து விட்டார். பின்னர் அமீர் அந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு சூர்யா அனுமதி தரவே இல்லை. படம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு பிரச்சனையா..? இந்தப் படம் நடக்குமா அல்லது வணங்கான் மாதிரி ஆகிவிமா என்று அச்சத்தில் விழி பிதுங்கி நிற்கிறார் வெற்றிமாறன்.

Next Story