மீண்டும் ஒரு ‘காக்க காக்க’! வொர்க் அவுட் வீடியோவை போட்டதற்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?
Surya Jyothika: தமிழ் சினிமாவில் என்றுமே காதல் தம்பதிகளாகவே வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இருவர் திருமணத்திற்கும் முதலில் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் பின் சூர்யா ஜோதிகா 4 ஆண்டுகள் காத்திருந்து பின் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா குடும்பம், குழந்தைகள் என பிஸியாக இருந்தார். பின் குழந்தைகள் பெரிதாகவும் ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார். அதுவும் பெண்களை மையப்படுத்தி அமையும்கதைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.
இதையும் படிங்க: தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!
ஆனால் இப்போது ஃபுல் ஃபார்மாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் ஜோதிகா. ஹிந்தியில் சமீபத்தில்தான் ஜோதிகா நடித்த படம் வெளியானது. இப்படி தமிழ், ஹிந்தி , மலையாளம் என அவரது கெரியரில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் ஜோதிகா.
இந்த நிலையில் ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து சமீபத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சூர்யாவுக்கு போட்டியாக ஜோதிகாவும் சளைக்காமல் தலைகீழாக நிற்பது, வெயிட்டான பொருளை தூக்குவது என சவால் நிறைந்த வொர்க் அவுட்களை செய்தார்.
இதையும் படிங்க: குருவுக்காக சிஷ்யன் செஞ்ச வேலையை பாருங்க.. ஷங்கர் இல்லத் திருமணத்தில் முகத்திரையை கிழித்த அட்லீ
இதற்கு பின்னனியில் ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தப் படத்தை ஒரு பெண் இயக்குனர்தான் இயக்கப் போகிறாராம்.அதனால் இரண்டு பெண் இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். ஒருவர் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கியவர். மற்றொருவர் அஞ்சலி மேனன் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த வொர்க் அவுட்கள் என்று சொல்லப்படுகிறது.