அமரன் படம் பார்க்க தனி விமானத்தில் வந்த சூர்யா - ஜோதிகா!... யாருக்காவது தெரியுமா?!..

by சிவா |   ( Updated:2024-11-12 01:08:29  )
அமரன் படம் பார்க்க தனி விமானத்தில் வந்த சூர்யா - ஜோதிகா!... யாருக்காவது தெரியுமா?!..
X

#image_title

Amaran: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள படம்தான் அமரன். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது.

முகுந்த் வரதராஜன்: காஷ்மிரில் தீவிரவாதிகளை ஒடுக்க முகுந்த் வரதராஜன் என்னென்ன செய்தார்?. தீவிரவாதிகளை எப்படி சூட்டு வீழ்த்தினார்? என பல முக்கிய அம்சங்கள் அமரன் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியாக இந்து ரெபகா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவாவில் சூர்யா அணிந்திருந்த டிரஸின் வெயிட் எவ்வளவு தெரியுமா? எப்படி தாங்குனாரு?

முகுந்த் வரதராஜனுக்கும் அவரின் மனைவி மற்றும் குழந்தைக்கு இடையே இருந்த அன்பான பிணைப்பு பற்றி படத்தில் காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. முகுந்த் வரதராஜன் மரணிக்கும் கடைசி 20 நிமிட காட்சிகள் மனதை பிழிவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி ரிலீஸ்: தீபாவளிக்கு வெளியான படங்களில் அமரன் 11 நாட்களில் 242 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இது அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களை விட அதிக வசூல் ஆகும். இன்னமும் இப்படம் தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

suriya jyotika

#image_title

சூர்யா ஜோதிகா: சில நாட்களுக்கு முன்பு சூர்யாவும் ஜோதிகாவும், சிவக்குமாரும் அமரன் படத்தை சென்னையில் பார்த்தார்கள். படம் பார்த்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமியை சூர்யா,ஜோதிகா, சிவக்குமார் எல்லோரும் பாராட்டினார்கள். சாய் பல்லவி நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார் ஜோதிகா. சூர்யா டிவிட்டரில் இப்படத்தை பற்றி பாராட்டி எழுதியிருந்தார்.

இந்நிலையில்தான் இப்படத்தை பார்ப்பதற்காகவே சூர்யாவும், ஜோதிகாவும் தனி விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. சூர்யாவும், ஜோதிகாவும் இப்போது குழந்தைகளுன் மும்பையில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Amaran: 12 நாளில் செம தரமான சம்பவம்?!… அடுத்த டார்கெட் இதுதான்… டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுத்த எஸ்கே!…

Next Story