ஆஸ்கர் விருது பெரும் உதயநிதி மற்றும் சூர்யா...குவியும் பாராட்டுக்கள்....
ஒவ்வொரு வருடம் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் பிரபலமடையும் பிரபலங்களுக்கு உலகளாவிய சமூக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2021 வருடத்திற்கான விருதுகளுக்கு பிரபலங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இண்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார்-2021 பிரிவுக்கு நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர், எம்.எல்.ஏ வாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் பிப்.19ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் போது உதயநிதி சிறப்பாக பணியாற்றி திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். மேலும், அவர் வெற்றி பெற்ற திருவல்லிக்கேனி தொகுதியில் மக்களுக்கான தேவைகளை செய்து கொடுத்து நல்ல பெயரை பெற்றார்.
அதேபோல், ஜெய்பீம் எனும் சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், பிரபல அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரும் பாராட்டியிருந்தனர். இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.