’விக்ரம்’ கேமியோ ரோலில் சூர்யா நடித்ததன் பின்னனி...! வெளிவராத சில உண்மைகள்..
விக்ரம் படம் வெற்றியை ஒரு பிரம்மாண்டமாக ரசிகர்களும் சரி, திரைபிரபலங்களும் சரி கொண்டாடி வருகிறார்கள். லோகேஷின் இந்த அசத்தலான உருவாக்கத்திற்கு முக்கிய பங்காக இருப்பவர்கள் நடிகர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சக நடிகர்கள். மேலும் அனிருத்தின் இசையில் விக்ரம் படம் கூடுதல் மெருகேற்றியிருப்பது சிறப்பு.
கடைசி நிமிட காட்சியில் சூர்யாவின் தோற்றம் அனைவரையும் மிரள வைத்தது. படம் முடிந்தாலும் இனிமேல் தான் ஆரம்பம் என மிரட்டுவது போல் சூர்யாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சூர்யா விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததன் மூலம் அவருக்கு பரிசாக கமல் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை அன்பளிப்பாக அளித்தார். மேலும் படத்தில் சூர்யாவை கமிட் செய்வதற்கு முன்பே சூர்யாவிடம் ஒரு டீல் பேசியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.
அதாவது விக்ரம் - 3 படத்தில் அவரின் கதாபாத்திரம் தான் முழுக்க முழுக்க அனல் பறக்க போகிறது என்றும் முழு ஸ்கிரிப்டையும் சொன்னதுக்கு அப்புறம் தான் அவர் இந்த ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக பிஸ்மி தெரிவித்தார். மேலும் விக்ரம்-3 படத்திற்கு சூர்யாவிற்கு சம்பளம் 40 கோடி என பேசப்பட்டுள்ளதாம்.