அங்க போனது தப்பா....? சூர்யா உட்பட மொத்த படக் குழுவினரையும் பேக் அப் செய்த பாலா...

சூர்யா - பாலா கூட்டணி ஏற்கெனவே சினிமாவில் மிகவும் வெற்றியாக அமைந்த கூட்டணி. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த நந்தா படம் பாலாவின் தயாரிப்பில் எடுக்கப்பட்டது. இவரின் படங்கள் என்றால் நடிகர் நடிகைகள் ரொம்பவே மெனக்கிடனும்.
அதையடுத்து பிதாமகன் படத்தில் கமிட் ஆனார். விக்ரமுடன் சூர்யா சேர்ந்து இருவரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்புடன் முடித்துக் கொடுத்திருப்ப்பர். இந்த படமும் நல்லா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு அப்புறம் இருவருக்குமே சூர்யா, விக்ரமிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் பாலா மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகி படத்தின் சூட்டிங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்த படத்தை பற்றிய வதந்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.என்னவென்றால் திடீரென பாலாவுக்கும் சூர்யாவுக்கும் மோதல் என்று தகவல் வெளியானது. ஆனால் உண்மையே வேறாம். படத்தின் முக்கால் வாசி சூட்டிங் கன்னியாகுமரியில் தான் நடக்கிறதாம். இப்பொழுது கோடைகாலம் என்பதால் கன்னியாகுமரியில் வெயில் வெழு வெழுனு வெழுக்கிறது.
அதுவும் பாதி சூட்டிங் கடலுக்கு நடுவே நடப்பதால் படக்குழுவினரால் வெயிலை தாங்க முடியவில்லையாம். அதனால் பேக் அப் செய்து விடலாம் என நினைத்துக் கொண்டிருக்க பாலாவோ மூன்று நாள் கழித்து கிழம்பிறலாம் என கூறியுள்ளாராம்.அதற்கு முன் அவர் வீட்டில் இருந்து போன் வந்ததாம். ஒரு சுப நிகழ்ச்சியாம் உடனே சென்னை வரனும்னு சொல்ல மூன்று நாள் கழித்து பேக் அப் செய்ய அன்னைக்கே பேக் அப் பண்ணி எல்லாரும் கிளம்பி விட்டார்களாம் இதில் சூர்யாவும் உட்பட.ஆனால் மீடியாக்கள் இதை பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏதோ பிரச்சினை போல என எண்ணிக்கொண்டனர்.