முதலமைச்சரின் வாழ்த்து மழையில் சூர்யா...! தமிழ் சினிமாவிற்கே கிடைத்த மாபெரும் பெருமை....
தனது நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி கொண்டிருப்பவர் பாலா இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவரின் ரோலக்ஸ் கதாபாத்திரம் படத்தில் உள்ள மற்ற அனைத்தையும் மறக்க செய்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்தார். அந்த அளவிற்கு கனமான பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். இதே வகையில் மாதவன் நடிப்பில் உருவாகும் ராக்கெட்டரி படத்திலும் இதே மாதிரியான கேமியோ ரோலில் நடிக்கிறார்.
மேலும் சூரறைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூகம் சார்ந்து பிரச்சினைகளுக்கு தன் படங்கள் மூலம் குரல் கொடுப்பவர் நடிகர் சூர்யா.
இவரின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில் சினிமாவில் உயரிய விருதான் ஆஸ்கார் விருதின் அகாடமி புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் உறுப்பினராக தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூர்யாவை நியமித்துள்ளது. இதன் மூலம் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ளார் சூர்யா. இந்த செய்தி அறிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சூர்யாவை பாராட்டி ட்விட்டரில் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.