நாங்க பலியாடு ஆக முடியாது... சூர்யாவின் பாலிவுட் எண்ட்ரிக்கு பெரிய தடா!..

by Akhilan |
Surya
X

Surya

Surya: நடிகர் சூர்யாவின் பாலிவுட் அறிமுகம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. ஒரு கட்டத்தில் சூர்யாவின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றிகளை குவித்தது. இனி சூர்யாவின் கேரியர் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: தளபதி 69 படத்தில் நான் இல்லை!.. என்னாச்சி தெரியாது!.. நடிகரை புலம்பவிட்ட ஹெச்.வினோத்!

ஆனால் திடீரென குடும்பத்துடன் மொத்தமாக மும்பைக்கு இடம்பெயர்ந்தார். ஜோதிகாவின் பெற்றோருடன் இருப்பதற்காகவே இந்த மாற்றம் என கூறப்பட்டது. ஆனால் அதிலும் சூர்யாவின் திட்டம் இருந்ததாம்.

பொதுவாக ஹிட் படங்களை கொடுத்து கொண்டு இருந்த சூர்யா பாலிவுட்டில் நடிக்க விரும்பினார். அப்படி அவர் கதை கேட்க தொடங்க ஓம் பிரகாஷ் இயக்ககத்தில் கர்ணன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

இதற்காக நடிகர் சூர்யாவும் தன்னுடைய கோலிவுட் படங்களை குறைத்து கொண்டார். இருந்தும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக தள்ளிப்போனது.

இருந்தும் சில மாதம் கழித்து தொடங்கும் என தகவல் கசிந்தது. ஆனால் தற்போதைய தகவலின்படி சூர்யாவின் முதல் பாலிவுட் படமான கர்ணன் பட்ஜெட் பிரச்னையால் கைவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பெரிய அளவிலான மார்க்கெட் இல்லாததும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Next Story