ரசிகர்களை மிரள வைத்த அந்த கதாபாத்திரம்...! இரண்டாம் பாகத்திலும் மிரட்ட வருவாரா சூர்யா..?
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. படம் வெளியாகி ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னரும் அந்த கதாபாத்திரம் மட்டுமே மக்கள் மனதில் பதிந்து கிடக்கிறது. சூர்யாவின் கெரியரில் கனமான நெகடிவ் ரோல் என்றால் அது ரோலக்ஸ் கதாபாத்திரம் தான்.
இந்த நிலையில் அவர் ஏற்கெனவே வில்லனாக நடித்த ‘24’ படத்தின் இயக்குனர் அந்த படத்தின் அடுத்த கட்ட பயணத்தை பற்றி இப்பொழுது வாய் திறந்துள்ளார். அந்த படமும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக அமைந்தது. அறிவியல் புனைகதையாக அந்த படத்தில் ஆதிரையா என்ற கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது.
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் சூர்யா. இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். மீண்டும் அதே கோணத்தில் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
ஏற்கெனவே சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் , அடுத்து சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒரு புதிய படம், இதற்கிடையில் பாலா இயக்கத்தில் வணங்கான் போன்ற படங்கள் வரிசையில் நிற்பதால் இந்த முடிவை பற்றி சீக்கிரம் சூர்யாவிடம் பேச படக்குழு தீர்மானித்துள்ளதாம்.