’வந்தியத்தேவனை’ விட மாஸ் காட்டும் ரோலக்ஸ்...! பொன்னியின் செல்வன் படத்தை கையில் எடுத்த சூர்யா...!

by Rohini |
surya_main_cine
X

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல். பிரபலமான இந்த வரலாற்று நாவலை நம் கண்முன் காட்ட காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகமாக தயாரிக்கப்பட்ட இந்த நாவலின் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை லைக்கா புரடக்‌ஷனுடன் மணிரத்னமும் சேர்ந்து தயாரித்துள்ளார்.

surya1_cine

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வரிசையாக படக்குழு வெளியிட்டுக் கொண்டிருக்கையில் அதை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

surya2_cine

விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி இவர்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியிட்ட நிலையில் இன்று ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்திருக்கும் போஸ்டர் வெளியாக உள்ளது. மேலும் கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளனர்.

surya3_cine

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழி சூப்பர் ஸ்டார்களை வைத்து படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்ட மணிரத்னம் தமிழில் நடிகர் சூர்யா தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீஸரை வெளியிட உள்ளாராம். ஏதாவது ஒரு விதத்தில் அண்ணனும் தம்பியும் இணைந்து கொள்கின்றனர்.

Next Story