விஜய்சேதுபதி பாணியை பின்பற்றும் சூர்யா! இப்படியே போனா புஷ்ஷாகி வீட்டில் உட்கார வேண்டியதுதான்
Actor Surya: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்துடன் வலம் வரும் நடிகர் சூர்யா.தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று கதை பின்னனியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வரவிருக்கிறது.
சென்னையில் தன் குடும்பத்துடன் தங்கியிருந்த சூர்யா இன்னும் தன்னுடைய கெரியரை பெரிதாக்க மும்பையில் செட்டிலானார். ஏதாவது முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஜோதிகா ஹிந்தி மற்றும் மற்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இவர தூக்கி சாப்பிட்ருவாங்க!.. சூதானமா இருக்கணும் சூரி..
இந்தப் பக்கம் சூர்யாவும் தன் லைன் அப்பில் வரிசையாக படங்களை சேர்ந்து வைத்துக் கொண்டு வருகிறார். விஜய் சேதுபதிதான் இதற்கு முன்னாடி யார் வந்து கேட்டாலும் கால்ஷீட் கேட்டாலும் கொடுக்கிற நடிகராக இருந்தார். இப்போது சூர்யாவும் அதே வழியில் இறங்கி விட்டதாக தெரிகிறது.
கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் மற்றும் சுதா கொங்கராவின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது போக இரண்டு தெலுங்கு இயக்குனர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: விஜயை பார்க்குறதா? இல்ல இவர பார்க்குறதா? தளபதி68ல் வில்லனாக மச்சக்கார நடிகர் – தளபதி பாடு திண்டாட்டம்தான்
இந்த நிலையில் பாலிவுட்டில் தன் அறிமுகத்தை கொடுக்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது. பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ராவுடன் சமீபத்தில் தனது சந்திப்பை நடத்தியிருக்கிறார் சூர்யா. ஒரு வேளை இந்தப் படம் புராணக்கதையை அடிப்படையாக கொண்டுகூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் வரிசை கட்டி படங்களில் கமிட் ஆனாலும் கங்குவா படத்தை தவிர மற்ற படங்களின் வேலைகள் நடந்தபாடில்லை. ஒரு மாஸ் நடிகராக இருக்கும் சூர்யா இப்படி தொடர்ந்து எல்லாரிடமும் கால்ஷீட் கொடுத்து காத்திருக்க சொல்வது என்பது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது என்று புலம்பிவருகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!