நடிகர் சூர்யா தனக்கேற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம. அந்த வகையில், சில நாட்களுக்கு முன் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
தற்போது, ரசிகர்கள் மத்தியில் அதிக பெயரை சம்பாதித்து கொடுத்தது என்றால் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வரும் அந்த சிறு கௌரவத் தோற்றமான ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி சமீபத்தில் கூட சூர்யாவிற்கு சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இவரது ஆரம்பகட்ட சினிமா வாழ்கை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, சினிமாவில் நுழைவதற்கு முன் ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தார் சூர்யா. அவர் வேலை பார்த்துக்கொண்டே இருக்கும்போது, இவர் திரையுலகில் கால் பதித்த முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்களேன் – இந்த விஷயத்துக்காக தான் விஜய் தலைமறைவா சுத்துறாரா.? விஷயம் தெரிஞ்சி போய்டுச்சே…
அப்போது, சூர்யாவும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டு ‘நேருக்கு நேர்’ படத்திற்காக கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்று விட்டாராம். இதனையடுத்து. படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, இவருக்கு சுத்தமாக நடிப்பு வரவே இல்லையாம் அப்போது, படக்குழு அனைவரும் இவரே பார்த்து சிரித்தனராம்.
இந்த நிலையில், என்னசெய்வதென்று படக்குழு யோசித்து கொண்டிருக்கும் போது, மதிய உணவு இடைவேளையில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இயக்குனரிடம் வந்து பிரியாணி சூப்பர் என்று சொல்லிருக்கிறார் சூர்யா. அதற்கு இயக்குனர் ‘அப்டியா நல்லா சாப்பிடு ராசா’ என சோகத்தில் சொன்னாராம், இதனை கேட்ட சூர்யா தனியாக ரூம் உள்ளே வந்து தலையணை நினையும் வரை அழுதாராம் இதனை ஒரு பேட்டி ஒன்றில் சூர்யா வெளிப்படையாக பேசிருப்பார்.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…