மேடையில் ‘ஜெய்பீம்’ படத்திற்காக கிடைத்த விருதை உதறித்தள்ளிய சூர்யா!.. லோகேஷை முகம் சுழிக்க வைத்த சம்பவம்..

by Rohini |   ( Updated:2023-04-01 13:03:23  )
surya
X

surya

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். சமூக சிந்தனைகளில் நாட்டம் கொண்டவராகவும் இருக்கிறார். குறிப்பாக மக்களுக்கு பிடித்த கலைஞராக விளங்கி வருகிறார் சூர்யா.

சமீபத்தில் கூட தன் உறவினர்கள், மனைவியுடன் கீழடி சென்று அங்கு உள்ள இடங்களை பார்வையிட்டு வந்தார். மனதில் ஏதாவது சமூகம் சார்ந்த சிந்தனைகளுடன் தான் சூர்யா சுற்றிக் கொண்டு வருகிறார். சமீபகாலமாக நடிக்கும் படங்களில் சமுதாய கருத்துக்கள் மக்களுக்கு சீக்கிரம் சென்றடையும் விதமான படங்களில் நடிக்க
ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது சூர்யா 42 என்ற வரலாற்று கதையை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்த விகடன் நடத்திய சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விழாவில் சூர்யா ஜெய்பீம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

மேடையில் அந்த விருதை அறிவித்ததும் மேடை ஏறிய சூர்யாவுக்கு கமல் கையால் அந்த விருது வழங்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட சூர்யா இந்த விருது ஜெய்பீம் படத்தில் நடித்த ராஜாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு கொடுப்பது தான் சரியாக இருக்கும் என கருதி,

மேடையில் விருதை வாங்கிய மணிகண்டன் தான் கமலின் பெரிய ஃபேன், ஆனால் லோகேஷும் கமலோட தீவிர ரசிகர் என்று சொல்லும் போது லோகேஷை அடிக்கனும் என்று தோன்றியது என விளையாட்டாக சொல்லியிருக்கிறார். லோகேஷுக்கும் மணிகண்டனுக்கும் இடையே நட்பு இருந்தாலும் இந்த விஷயத்தை இவ்ளோ பெரிய மேடையில் சொன்னது பல பேருக்கு முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏன் லோகேஷுக்கும் ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்தியதாம்.

Next Story