எனக்கு தான் வேணும்...சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி... கசிந்த தகவல்

by Akhilan |   ( Updated:2022-09-26 06:00:35  )
எனக்கு தான் வேணும்...சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி... கசிந்த தகவல்
X

தமிழ் சினிமா அண்ணன் - தம்பிகளில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும்... சின்ன வயசில் எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டவர்கள், இன்று மெச்சூர்டான ஒரு சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள். அவரது தந்தை சிவக்குமாரும் நடிகர்தான்.

அதேபோல் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர். மேலும், 2டி நிறுவனம் மூலம் சூர்யா படங்களையும் தயாரித்து வருகிறார். அறம் அறக்கட்டளை வாயிலாக எத்தனையோ மாணவர்களைப் படிக்க வைத்தும் வருகிறார்கள் அவரது குடும்பத்தினர்.

ஆனால், சின்ன வயசில் கார்த்தியும் சூர்யாவும் எப்படி இருந்தார்கள் தெரியுமா.... நடிகர் சிவக்குமாருக்கு மூன்று குழந்தைகள் மூத்தவர் சூர்யா, இரண்டாவது கார்த்தி இவர்களுக்கு பிருந்தா என்கிற தங்கையும் இருக்கிறார். இதனால்தான் கார்த்திக்கு சிறுவயதில் பிரச்னையே வந்திருக்கிறது. மூத்த பிள்ளை சூர்யா அம்மாவோட செல்லமாம். இளைய பிள்ளை பிருந்தா அப்பாவுடைய செல்லமாம்.

இதையும் படிங்க: நம்ம சூர்யாவின் மும்பை ரகசியம்.. அந்த 200 கோடி சமாச்சாரம்.! அண்ணன் வழியில் தம்பி கார்த்தி…

இதனால், இவருக்கு எதாவது ஒரு பொருள் வேண்டும் என்றால், மூத்த பிள்ளை உங்க பிள்ளை, இளைய பிள்ளை செல்லப் பிள்ளை, நடுவில் பிறந்த நான் மட்டும் எடுப்பார் கைப்பிள்ளையா என்று செண்டிமெண்டாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வாராம் கார்த்தி. அதேபோல், சினிமா நடிகரின் மகன்கள் என்றாலும் ஒரு நடுத்தர வர்க்கக் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுவார்களோ, அப்படித்தான் இவர்களை சிவக்குமார் வளர்த்திருக்கிறார்.

பள்ளிக்கு காரில் சென்றதில்லையாம். பேருந்தில்தான் சென்று வந்திருக்கிறார்கள். அதேபோல், கார்த்தி பத்தாம் வகுப்புப் படிக்கும்போதுதான் முதல்முறையாக சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். சின்ன வயசில் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ஆகவே ஆகாதாம். ஏண்டா நமக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்கிறான் என்றெல்லாம் நினைத்திருக்கிறாராம் கார்த்தி. அடிக்கடி இருவரும் பயங்கரமாக கட்டிப்பிடித்து அடித்துக் கொள்வார்களாம்.

குண்டாக இருந்தாலுமே கார்த்தி பெரும்பாலான சண்டைகளில் தோற்றுவிடுவாராம். கார்த்தி எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவராம். அவரது சைக்கிள், பைக்கை யாராவது எடுத்து ஓட்டினாலும் பிடிக்காதாம். ஆனால், சூர்யா எதையும் விட்டு வைக்கமாட்டாராம். குண்டாக இருந்த கார்த்தியின் சட்டைகளை சூர்யா அணிந்துகொள்வது சுலபம். ஆனால், சூர்யாவின் சட்டையைப் போட்டாலோ, கார்த்திக்கு அது செட்டாகாதாம்.

சைக்கிளுக்காக ஒரு முறை இருவரும் கட்டிப்புரண்டு கடுமையாக சண்டை செய்திருக்கிறார்களாம். ஆனால், புரூஸ்லீ படங்கள் பார்ப்பது ஒன்றில் மட்டும் இருவருக்கும் எப்போதும் ஒற்றுமை இருக்குமாம். ஆனால், படம் பார்த்துவிட்டு வந்தபிறகு மீண்டும் பயங்கரமாக சண்டை வருமாம். இப்படியான சூழலில் அமெரிக்கா சென்று வந்தபிறகு கார்த்தி, கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார். அதேபோல், வீட்டில் பேசுவதற்குக் கூட ஆளே இல்லையாம். சூர்யா ஒரு பெரிய நடிகராக வளர்ந்திருந்தாராம்.

அவரை கும்பகோணத்தில் நடந்த பிதாமகன் ஷூட்டிங்கில் சென்றுதான் கார்த்தி சந்திக்க முடிந்ததாம். அதேபோல், அமைதியான கார்த்தி உள்ளூரில் ரவுடித் தனம், அலப்பறையைக் கூட்டும் பருத்திவீரன் படத்தில்தான் முதன்முதலில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் கார்த்திக்கு, முதல் காரை சூர்யா வாங்கிக் கொடுத்தாராம்.

Next Story