சூர்யா சார் பாக்கும் போதெல்லாம் கேக்குற ஒரே கேள்வி...! தப்பிக்க முடியாமல் தவிக்கும் லோகேஷ்....

by Rohini |
surya_main_cien
X

தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னுடைய வேலையை திறம்பட செய்து வருகிறார்.

surya1_cine

இவரது நடிப்பில் அதிகளவு பேசப்பட்ட கதாபாத்திரம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான். நடித்தது 10 நிமிட காட்சியானாலும் 10 ஜென்மம் மறக்க முடியாத அளவிற்கு வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்து கெத்து காட்ட வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ்.

surya2_cine

ஏற்கெனவே லோகேஷ் 5 வருடங்களாகவே சூர்யாவிடம் கதை சொல்லிவருவதாக கூறப்படுகிறது. இரும்புக்கை மாயாவி படம் சூர்யாவை வைத்து எடுக்கப்போகும் லோகேஷின் படமாகும். சூர்யா லோகேஷை பார்க்கும் போதெல்லாம் இரும்புக்கை மாயாவி படத்தை எப்பொழுது தான் எடுக்க போறனு கேட்பாராம்.

surya3_cine

ஆனால் இரும்புக்கை மாயாவி கண்டிப்பாக சூர்யாவை வைத்து தான் எடுப்பேன். சூர்யா சார் படமாக தான் இருக்கும் என சொல்லியிருக்கிறார் லோகேஷ். ஆனால் அதற்கு முன் அவரது இயக்கத்தில் விஜய் அடுத்து கார்த்தியின் கைதி 2 படம் இவைகளுக்கு அப்புறம் கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து தான் தன்னுடைய புதிய படத்திற்கு அடித்தளம் போடுவார் என தெரிகிறது.

Next Story