இவங்களே சோலியை முடிச்சுடுவாங்க போல! ரசிகர்களின் செயலால் அப்செட்டில் சூர்யா - கோவத்தில் கத்திய சிவக்குமார்
சினிமாவில் நடிகர்கள் ஒரு பக்கம் அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட ரசிகர்களால் சில சமயங்களில் பல வேதனைகளை அடைவதும் உண்டு. இந்த நிலையில் ரசிகர்களின் செயலால் மிகவும் கடுப்பாகி இருக்கிறார் நடிகர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. 12 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
கிட்டத்தட்ட இந்த கங்குவா திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ள நிலையில் சூரியாவின் பிறந்த நாளான 23ஆம் தேதி ஒரு பிலிம்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டது. அந்த வீடியோவை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். நடிக்க சொன்னால் கொஞ்சம் ஓவராகவே நடிக்கும் சூர்யாவிற்கு இந்தப்படம் அவருக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
இதையும் படிங்க : ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு வந்த சிக்கல் – தலைவருக்கே ஆட்டம் காட்டிட்டாங்களே!
இந்த நிலையில் ஆந்திராவில் சூர்யாவின் ரசிகர்கள் இரண்டு பேர் சூர்யாவிற்காக கட் அவுட் வைக்கிறேன் பேர் வழியில் அந்த இரண்டு ரசிகர்களும் கீழே விழுந்து இறந்திருக்கின்றனர். இந்த செய்தி திரையுலகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்த சூர்யா அந்த இரு ரசிகர்களின் குடும்பங்களையும் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்து அவர்களுக்கு தேவையான பண உதவியும் செய்து இருக்கிறாராம் சூர்யா. எப்பொழுதுமே சூர்யா தன்னுடைய ரசிகர்களிடம் பாதுகாப்பாக இருப்பதை வலியுறுத்தி வருபவராம். ஆனால் இது அவரையும் மீறி நடந்து இருப்பதால் மிகவும் மன வேதனை அடைந்திருப்பதாக சூர்யா தரப்பில் சொல்லப்படுகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க மதுரையில் சூர்யாவின் ரசிகர்கள் வருங்கால முதல்வரே என வாசகம் அடித்து சூர்யாவின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்திருக்கின்றனர். இந்த செய்தி சிவக்குமார் காதுக்கு செல்ல கடும் கோபத்திற்கு ஆளானாராம் சிவக்குமார். உடனே சிவக்குமார் சூர்யாவை அழைத்து இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் ரசிகர்களிடம் இந்த மாதிரி செய்வதை தவிர்க்க சொல்லுமாறு கேட்டுக் கொண்டாராம்.
சிவக்குமார் சொல்வதை தட்டாமல் கேட்ட சூர்யா தன்னுடைய ரசிகர்களிடம் இந்த மாதிரி இனி செய்ய வேண்டாம் என அன்பு கட்டளை விடுத்திருக்கிறாராம்.
இதையும் படிங்க : சேத்துவச்ச கோவம்தான்! விஜயை பற்றி பிரேமலதா பேசியதற்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?