சூர்யா மட்டும் இல்லைன்னா சிக்கியிருப்பேன்! சீக்ரெட்டை உடைத்த உதயநிதி

Published on: June 27, 2023
surya
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. தற்போது சூர்யா சிறுத்தை சிவா உடன் இணைந்து 3டி படமான கங்குவார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடிக்கிறார்.

இரண்டு வருடங்களாக தயாராகிக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவை பற்றி உதயநிதி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார். அதாவது உதயநிதி தற்போது மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

surya
surya

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உதயநிதி நடித்த படம் தான் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி உடன் சேர்ந்து வடிவேலு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

இந்தப் படம் தான் உதயநிதிக்கு கடைசி படமாக அமைய இருக்கின்றது. மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

அப்பொழுதுதான் உதயநிதி சூர்யாவை பற்றிய அந்த ஒரு சீக்ரெட்டை பகிர்ந்தார். அதாவது 2011 ஆம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் ஏழாம் அறிவு. அந்தப் படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு வசனம் இருந்ததாம்.

surya2
surya2

ஆனால் அந்த நேரத்தில் உதயநிதிக்கு சமூக நீதிகளை பற்றிய எந்த ஒரு வெளிப்படையான அறிவும் இல்லாததால் இந்த ஒரு வசனத்தை அவர் பெரிதாக எண்ணவில்லையாம். ஆனால் அதை சூர்யா கண்டறிந்து இது படத்தில் வைத்தால் நாளை பிரச்சனை நமக்கு தான் வரும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த படத்தில் இருந்து இந்த வசனத்தை நீக்கினார்களாம்.

இதையும் படிங்க :ஜோதிகாவுக்கு பதிலா நான் வரேன்!.. சூர்யாவிடம் பிரச்சனை செய்த அசின்.! இப்படியும் நடந்துச்சா…

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசிய உதயநிதி இந்த வசனம் மட்டும் இடம்பெற்று இருந்தால் பெரிய ஆபத்தே வந்திருக்கும் என்றும் அந்த மேடையில் கூறினார் உதயநிதி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.