7 ஜி ரெயின்போ காலனி படத்தோட பர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா? இந்த டாப் நடிகர்கள் என்றால் நம்ப முடிகிறதா?
மாறுபட்ட கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ள இயக்குனர் தான் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
காதல் படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் பாடல்களும் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியதாவது, "7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நானும் சோனியாவும் முதல் சாய்ஸ் கிடையாது. முதலில் மாதவன் அல்லது சூர்யாவை வைத்துதான் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் சூர்யா சார் காக்க காக்க மற்றும் பிதாமகன் ஷுட்டிங்கில் மிகவும் பிசியாக இருந்தார்.
அதேபோல் மாதவன் சாரும் பிரியமான தோழி படத்துல பிசியா இருந்ததால அவங்க ரெண்டு பேரோட கால்ஷீட்டும் கிடைக்கல. அதனால வேற வழி இல்லாம புதுமுகம் யாரையாவது நடிக்க வைக்கலாம்னு சொன்னாங்க. அப்போதான் செல்வா சார் என்னை செலக்ட் பண்ணாங்க.
நான் அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன். இரண்டு மாசத்துல ஸ்லிம் ஆன பிறகுதான் செல்வா சார் ஓக்கே சொல்லி, ஃபோட்டோ ஷூட் பண்ணாங்க. அதுக்கு பிறகு ஹீரோயினா சோனியாவை முடிவு பண்ணி எங்க ரெண்டு பேருக்கும் ஃபோட்டோ ஷூட் பண்ணாங்க.
ஆனால் சுப்பிரமணியபுரம் சுவாதிதான் முதல் சாய்ஸ். அவங்கள வச்சு 20 நாள் ஷூட்டிங் பண்ணிட்டோம். ஆனா அவங்க எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு இருந்தாங்க. அதனால கால்ஷீட் பிரச்சனை வந்தது. கடைசியா அவங்களே நான் படத்துல இருந்து விலகுறேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் தான் சோனியாவ முடிவு பண்ணாங்க" என கூறியுள்ளார்.