திருமணத்திற்காக சூர்யா-ஜோதிகா போட்ட ஒரே கண்டீஷன்...! மௌனமான சிவக்குமார்...
தமிழ் சினிமாவில் போற்றப்படும் நட்சத்திர தம்பதிகளாக ஜொலிப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஏராளமான படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர். உயிரிலே கலந்தது, காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், பேரழகன், போன்ற படங்களில் நடித்தனர்.
காக்க காக்க படத்திற்கு பிறகு தான் இவர்களின் திருமணம் அரங்கேறியது. 4 வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவகுமார் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடமே கேட்கையில் நானும் ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். பல பெண்களை காதலித்துள்ளேன்.
படத்தில் காதலுக்காக அப்பாவிடம் நிறைய போராடிக்கிறேன். அப்படி இருக்கையில் என்னால் எப்படி தடுக்க முடியும் என்று சிவக்குமார் கூறினார். மேலும் சூர்யாவும் ஜோதிகாவுல் 4 வருடங்களாக காதலிக்கிறோம். சம்மதம் கொடுத்தால் திருமணம் செய்கிறோம். இல்லாவிட்டால் இப்படியே இருந்து விடுவோம் என்று கூறினார்களாம்.
கொஞ்ச நாள் மௌனம் காத்த சிவக்குமார் அதன் பின்னரே எல்லாருடைய சம்மதத்தின் பேரில் இவர்களது திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.