சூர்யா-ஜோதிகா மும்பை செட்டில் ஆனதுக்கு இதுதான் காரணமா?.. சிவக்குமாரின் நிலைமை?..

by Rohini |
surya
X

surya

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் தான். தற்போது ஜோதிகா ஒரு சில படங்களில் முக்கியத்துவம் இருக்கிற கதைக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

surya1

surya1

மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஜோடியாக நடித்து வருகிறார் ஜோதிகா. மேலும் சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்டையும் ஜோதிகாதான் நிர்வகித்து வருகிறார். சூர்யாவின் சூர்யா 42 படம் தான் ரசிகர்களின் பெரும் ஆர்வமாக கருதப்படுகிறது. ஆனால் படம் ஒரு வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்பும் இன்னும் ஒருவருட காலம் இருக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சில தகவல்கள் வெளியானது. வெளியானதுடன் பல வதந்திகளும் பரவின. ஜோதிகாவிற்கும் சூர்யாவின் வீட்டிற்கும் பிரச்சினை இருப்பதால் தான் ஜோதிகா தனிக்குடித்தனம் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்ற செய்திகளும் வந்தன.

surya2

surya2

அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் பட தயாரிப்பை மேற்கொள்ள சூர்யா முடிவெடுத்திருப்பதால் மும்பைக்கே சென்று விட்டார் என்றும் சில செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையிலேயே அவர்கள் மும்பை செல்ல காரணமாக இருந்தது ஜோதிகாவின் பெற்றோர்கள் தானாம்.

அதாவது ஜோதிகாவின் அம்மாவிற்கோ அப்பாவிற்கோ யாருக்கோ உடல் நிலை சரியில்லையாம். அவர்களை பார்த்துக் கொள்வதற்காகவே ஜோதிகா மும்பை சென்றதாகவும் தாயை விட்டு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் என்பதற்காக சூர்யாவின் பிள்ளைகளும் சேர்ந்து சென்றதாகவும் கூறப்ப்டுகிறது.

surya3

surya3

மேலும் பாதி நாள்கள் சூர்யா படப்பிடிப்பிற்காக வெளியூரிலேயே இருப்பதால் தான் அவரும் சேர்ந்து மும்பை நகர்ந்தார் என்றும் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.அதுவும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி வட மாநிலத்தை சுற்றியே நடைபெற்று கொண்டிருப்பதால் தான் அனைவரும் மும்பைக்கே சென்று விட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க : கல்யாணத்தில் விருப்பமில்லாத மணிரத்னம்!.. சுஹாசினி செய்த ராஜதந்திரம் என்ன தெரியுமா?..

Next Story