சூர்யா - ஜோவின் வைரல் போட்டோ... பிளாக் அன் பிளாக்கில் ஜாக்கிங்
சூர்யா - ஜோதிகா இருவரும் ரோட்டில் ஜாக்கிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான இவர்களின் போட்டோ பலரையும் கவர்ந்துள்ளது.
சூர்யா - ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் தெரிந்த விஷயமே. ஆனாலும், திருமணத்திற்கு பின்பும் கூட இருவரிடமும் குறையாத அந்த காதலைப் பார்க்கும் போதுதான் கொள்ளை அழகு. ஜோதிகாவின் 50வது திரைப்பட விழாவில் கூட சூர்யா, ஜோதிகாவைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருந்தது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எந்த இடத்திலும் ஜோதிகா சூர்யாவை விட்டுக் கொடுக்காமல் பேசி இருப்பார்.
சூர்யாவின் நடிப்பில் ஜெய் பீம் படம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. மேலும், இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதேபோல், ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே படமும் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில், இருவரும் ஜாக்கிங் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.